பக்கம்:ஞானசம்பந்தர்.pdf/216

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அப்பர் பெருமானுடன் தலவழிபாடு 173. என்பது நான்காம் பாடல். மற்றொரு நாள் திலதைப்பதி முற்றம் என்ற திருத்தலத்திற்கு வருகின்றார். பொடிகள் பூசிய (2.118) என்ற செந்தமிழ் மாலையால் தலத்துப் பெருமானை வழுத்துகின்றார். புரவியேழும் மணிபூண் டியங்குங் கொடித்தேரினான் பரவிகின்று வழிபாடு செய்யும் பரமேட்டியூர் விரவிஞாழல் விரிகோங்கு வேங்கை சுரபுன்னைகள் மரவமவ்வல் மலருக்தி லதைம்மதி முத்தமே. (6) என்பது இம்மாலையில் ஆறாவது மலர். பின்னர் திருவிழி மிழலைக்கே திரும்பி விடுகின்றார்.23 - திருவீழி மிழலை நாதனிடம் விடைபெற்றுக் கொண்டு திருவாஞ்சியம்' வருகின்றார். வன்னி கொன்றை (2.7). என்ற முதற் குறிப்புடைய சொல்மாலையைச் சாத்திச் சேவிக்கின்றார் தலத்து இறைவனை. மேவி லொன்றர் விரிவுற்ற இரண்டினர் மூன்றுமாய் நாவின் நாலருடல் அஞ்சினர் ஆறு ஏழ் ஓசையர் 22. திலதைப்பதி (செதலைப்பதி, திலதர்ப்பண்பு): பூந்தோட்டம் என்ற இருப்பூர்தி நிலையத்திலிருந்து 1; கல் தொலைவு. சம்பந்தர் பாடல் மட்டிலும் பெற்ற தலம். 23. திருவிழி மிழலை விசேட நிகழ்ச்சிகள் அடுத்த கட்டுரையில் (கட்டுரை-9) விரிவாக விளக்கப்படுகின்றது. 24. வாஞ்சியம் (ரீ வாஞ்சியம்): நன்னிலத்திலிருந்து 6 கல் தொலைவு. திருமால் பூர் என்னும் இலக்குமியை, வாஞ்சித்துச் சிவபூசை செய்து பெற்றமையால் பூர்வாஞ்சியம். ஆயிற்று. காசிக்கு நிகர் எனப்படும் தலங்களுள் ஒன்று.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஞானசம்பந்தர்.pdf/216&oldid=856070" இலிருந்து மீள்விக்கப்பட்டது