பக்கம்:ஞானசம்பந்தர்.pdf/217

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

174 - ஞானசம்பந்தர் தேவில் எட்டர் திருவாஞ்சிய மேவிய செல்வனார் பாவங் தீர்ப்பர் பழிபோக்குவர் தம்மடி யார்கட்கே. (3) என்பது மூன்றாவது வாடா நறுமலர். திருவாஞ்சியத்திலிருந்து தலையாலங்காடு வருகின் றார். இறைவனைச் சேவிக்கின்றார் (பதிகம் இல்லை) தலையாலங்காட்டிலிருந்து பெருவேளுர் வருகின்றார். அண்ணாவுங் கழுக்குன்றம் (3.64) என்ற முதற்குறிப் புடைய திருப்பதிகம் பாடி தலத்து இறைவனைப் போற்று கின்றார். இதில், இறைக் கொண்ட வளையாளோடு இருகூறாய் ஒருகூறு மறைக்கண்டத் திறைநாவர் மதிலெய்த சிலைவலவர் கறைக்கொண்ட மிடருடையர் கனல்கிளரும் சடைமுடிமேல் பிறைக்கொண்ட பெருமானார் பெருவேளுர் பிரியாரே. (4) என்பது கான்காவது திருப்பாடல். பெருவேளுரிலிருந்து தனிச் சாத்தங்குடி’ வருகின்றார். தலத்துப் பெருமானைச் சேவிக்கின்றார். (பதிகம் இல்லை.) சாத்தங்குடியிலிருந்து கரவீரம்" என்ற திருத்தலத்திற்கு வருகின்றார். அரியும் 25. தலையாலங்காடு : தஞ்சை - நாகூர் ltt tff வழியில் ಧಿಲ್ಲಿ 6 దే *ಟ தி 26. பெருவேளுர் (காட்டுர் அய்யம் Gسامه تالا(: கொரடாச்சேரியிலிருந்து 8 கல் தொலைவு. 27. இத்திருத்தலத்தைப்பற்றி அறிந்து கொள்ளத் தக்க ஆதாரங்கள் கிடைக்கவில்லை. . 28. கரவீரம் (கரையபுரம்) : திருவாரூர்க் கருகிலுள்ள ஆழிக்கரை என்று இருப்பூர்தி 'ே; கல் தொலைவு. சம்பந்தர் பாடல் மட்டிலும் பெற்ற தலம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஞானசம்பந்தர்.pdf/217&oldid=856072" இலிருந்து மீள்விக்கப்பட்டது