பக்கம்:ஞானசம்பந்தர்.pdf/218

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அப்பர் பெருமானுடன் தலவழிபாடு 175 கம்வினை (1.58) என்ற முதற்குறிப் புடைய திருப்பதிகம் பாடி இறைவனை ஏத்துகின்றார். பறையு நம் வினையுள்ளன. பாழ்பட மறைவு மாமணிபோற் கண்டம் கறையவன் திகழும் காவிரத்தெம் இதைய வன் கழல் ஏத்தவே, (4) என்பது இப்பதிகத்தின் நான்காவது பாடல். கரவீரத்தெம்பெருமானிடம் விடை பெற்றுக் கொண்டு காழி வேந்தர் விளமர்சி என்ற திருத்தலத்திற்கு வருகின்றார். வந்தவர் மத்தக மணிபெற (3.88) என்ற முதற்குறிப்புடைய செந்தமிழ் மாலை சாத்தித் தலத்திறைவனை வழிபடு கின்றார். இதில், - மனைகள்தொ றிடுவலி யதுகொள்வர் மதிபொதி சடையினர் கனைகட லடுவிட மழுதுசெய் கறையணி மிடறினர் முனைகெட வருமதி ளெரிசெய்த வவர்கழல் பரவுவார் . வினைகெட அருள்புரி தொழிலினர் செழுங்கள் விளமரே. : (6) என்பது ஆறாவது தமிழ் மணங்கமழும் வாடா நறுமலர். விளமரிலிருந்து திருவாரூர் வருகின்றார்; புற்றிடங்கொண்ட பெருமானை வழிபடுகின்றார் (பதிகம் இல்லை). ஆரூர்ப் பெருமானிடம் விடை பெற்றுக் கொண்டு காறாயில்' என்ற திருத்தலத்திற்கு எழுந்தருளுகின்றார். 29. விளமர் : திருவாரூரிலிருந்து 2 கல் தொலைவு. சம்பந்தர் பாடல் மட்டிலும் பெற்ற தலம். 30. காறாயில் (திருக்காறை வாசல்) : மயிலாடுதுறை. காரைக்குடி இருப்பூர்தி வழியில் மாவூர்ரோடு என்ற நிலை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஞானசம்பந்தர்.pdf/218&oldid=856074" இலிருந்து மீள்விக்கப்பட்டது