பக்கம்:ஞானசம்பந்தர்.pdf/219

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

# 76 ஞானசம்பந்தர் ரோனே நீள்சடை' (2.15) என்ற முதற்குறிப்புடைய திருப் பதிகம் பாடி இறைவனை வழுத்துகின்றார். இதில், கலையானே கலைமலி செம்பொற் கயிலாய மலையானே மலைபவர்.மும் மதில்மாய் வித்த சிலையானே சீர்திகழும் திருக்கா றாயில் நிலையானே யென்பவர்மேல் வினைதில் லாவே. - (5). என்பது ஐந்தாவது பாடல். - - திருக்காறாயில் இறைவனிடம் விடைபெற்றுக் கொண்டு தேவூர் வருகின்றார். இரண்டு பதிகங்களால் தேவூர் தேவைச் சேவிக்கின்றார். பண்ணிலாவிய (282) என்ற முதற்குறிப்புடையது ஒரு பதிகம். இதில், > பொங்கு பூண்முலைப் புரிகுழல் வரிவளைப் பொருப்பின் மங்கை பங்கினன் கங்கையை வளர்சடை வைத்தான் திங்கள் சூடிய தீநிறக் கடவுள்தென் தேவூர் அங்க ணன்றனை யடைந்தனம் ; அல்லலொன் றிலமே. (6) யத்திலிருந்து 3 கல் தொலைவு. சப்தவிடங்கங்களுள் ஒன்று. ஆதிவிடங்கர்; குக்குட நடனம்; சம்பந்தர் பாடல் மட்டிலும் பெற்ற தலம். - 31. தேவூர் : தஞ்சை-நாகூர் இருப்பூர்தி வழியில் கீழ் வேலூர் நிலையத்திலிருந்து 2 கல் தொலைவு. கட்டு மலைக் கோயில். சம்பந்தர் பாடல் மட்டிலும் பெற்ற தலம். .

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஞானசம்பந்தர்.pdf/219&oldid=856076" இலிருந்து மீள்விக்கப்பட்டது