பக்கம்:ஞானசம்பந்தர்.pdf/220

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அப்பர் பெருமானுடன் தலவழிபாடு 177 என்பது ஆறாவது தமிழ் மலர். அடுத்த பதிகம் காடுபயில் வீடு (3.74) என்ற முதற்குறிப்புடையது. கன்றியெழ வென்றி.கிகழ் துன்றுபுர மன்றவிய நின்று நகைசெய் என்றனது சென்றுகிலை யெந்தைதன தந்தையம ரின்ப நகர்தான் முன்றின்மிசை கின்றபல வின்கனிகள் தின்றுகற வைக்குரு ளைகள் சென்றிசைய நின்றுதுளி யொன்றவிள்ை யாடிவளர் தேவூ ரதுவே. (7) என்பது இப்பதிகத்தின் ஏழாவது திருப்பாடல். தேவூர்த்தேவனிடம் விடைபெற்றுக் கொண்டு கெல்லிக்கா வருகின்றார். 'அறத்தாலுயர் (2-19) என்ற முதற்குறிப்புடைய திருப்பதிகம் பாடி இறைவனை வழுத்து கின்றார். பிறைதான் சடைசேர்த்திய எந்தை பெம்மான் இறைதான் இறவாக் கயிலை மலையான் மறைதான் புனலொண் மதிமல்கு சென்னி நிறைதான் கெல்லிக் காவுள் நிலாயவனே. (7) என்பது ஏழாவது திருப்பாடல். - நெல்லிக்காவுள் நிலாயவனிடம் விடை பெற்றுக் கொண்டு கைச்சினம்.38 என்ற திருத்தலத்திற்கு வருகின்றார் 32. நெல்லிக்கா (திருநெல்லிக்காவல்): மயிலாடுதுறை. காரைக்குடி இருப்பூர்தி வழியில் திருநெல்லிக்காவல் என்ற நிலையத்திலிருந்து ; கல் தொலைவு. தீபாவளி முதல் ஏழு நாளும் மாசி 18ஆம் நாள் முதல் ஏழுநாளும் பகலவன் மறையும்போது கதிர்கள் மூலத்தான மூர்த்தியின்மீது விழுகின்ற சூரிய பூசைத்தலம். சம்பந்தர் பாடல் மட்டிலும் பெற்ற தலம். - - 33. கைச்சினம் (கச்சினம்): மயிலாடு துறைை காரைக்குடி இருப்பூர்தி வழியிலுள்ள ஆலத்தம்பாடி 12

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஞானசம்பந்தர்.pdf/220&oldid=856080" இலிருந்து மீள்விக்கப்பட்டது