பக்கம்:ஞானசம்பந்தர்.pdf/221

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

178 ஞானசம்பந்தர் திருஞானசம்பந்தர். தையலோர் கூறுடையான் (2.45) என்ற முதற்குறிப்புடைய திருப்பதிகம் பாடி இறைவனை ஏத்துகின்றார். இதில், விடமல்கு கண்டத்தான் வளையோர் கூறுடையான் படமல்கு பாம்பரையான் பற்றாதார் புரமெரித்தான் கடமல்கு மாடலினான் நான்மறையோர் பாடலினான் கடமல்கு மாவுரியான் உறைகோயில் கைச்சினமே. (2) என்பது இரண்டாவது தமிழ் மணங்கமழும் வாடா நறுமலர். கைச்சினத்தீசனிடம் விடைபெற்றுக் கொண்டு தெங்கூர்’ என்ற திருத்தலத்திற்கு வருகின்றார் சண்பை வேந்தர். புரைசெய் வல்வினை (2.93) என்ற திருப்பதிகம் பாடி இறைவனைச் சேவிக்கின்றார். சித்தக் தன்னடி கினைவார் செடிபடு கொடுவினை தீர்க்கும் கொத்தின் தாழ்சடை முடிமேல் கோளயிற் றரவொடு பிறையன் பத்தர் தாம்பனிங் தேத்தும் பரம்பரன் பைம்புனல் பதித்த வித்தன் தாழ்பொழில் தெங்கூர் வெள்ளியங் குன்றமர்ந் தாரே. . (2) என்பது இத்திருப்பதிகத்தின் இரண்டாவது பாடல். (மணலிக்கு அடுத்தது) என்ற நிலையத்திலிருந்து 1 கல் தொலைவு. இந்திரன் பூசித்த கைவிரற்குடி (கைச்சின்னம்) இலிங்கத்திற் காணப்படுகின்றது. சம்பந்தர் பாடல் மட்டிலும் பெற்ற திருத்தலம். - 34. தெங்கள்: திருநெல்லிக்காவல் இருப்பூர்தி நிலை யத்திலிருந்து கல் தொலைவு. சம்பந்தர் பாடல் மட்டிலும் "பெற்ற தலம். - -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஞானசம்பந்தர்.pdf/221&oldid=856082" இலிருந்து மீள்விக்கப்பட்டது