பக்கம்:ஞானசம்பந்தர்.pdf/222

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அப்பர் பெருமானுடன் தலவழிபாடு 179 தெங்கர் தேவனிடம் விடைபெற்றுக் கொண்டு கொள்ளிக்காடு’ என்ற திருத்தலம் அடைகின்றார். *தினம்படு சுடலையின் (3.16) என்ற முதற்குறிப்புடைய திருப்பதிகம் பாடி கொள்ளிக் காட்டிறைவனைச் சேவிக் இன்றார். வாரணி வனமுலை மங்கை யாளொடும் சீரணி திருவுருத் திகழ்ந்த சென்னியர் காரணி சிலைதனால் கணுக லாரெயில் கூரெரி கொளுவினர் கொள்ளிக் காடரே (5) என்பது ஐந்தாவது பாடல். கொள்ளிக்காட்டு இறைவனிடம் விடைபெற்றுக் கொண்டு கோட்டுர்’ என்ற திருத்தலத்திற்கு வருகின்றார். லேமார்தரு கண்டனே (2.109) என்ற் முதற்குறிப்புடைய திருப்பதிகம் பாடி இறைவனைச் சேவிக்கின்றார். துன்று வார்சடைத் துமதி . மத்தமும் துன்னெருக்கார் வன்னி பொன்றி னார்தலைக் கலனொடு பரிகலம் புலியுரி யுடையாடை கொன்றை பொன்னென மலர்தகு கோட்டுர்கற் கொழுந்தேஎன் றெழுவாரை என்று மேத்துவார்க் கிடரிலை கேடிலை ஏதம்வந் தடையாவே. (6) என்பது இப்பதிகத்தின் ஆறாவது திருப்பாடல். 35. கொள்ளிக்காடு : மயிலாடுதுறை - காரைக்குடி இருப்பூர்தி வழியில் ஆலத்தம்பாடி (மணலியருகில்) நிலையத் திலிருந்து 4 கல் தொலைவு. சம்பந்தர் பாடல் மட்டிலும் பெற்ற திருத்தலம். 36. கோட்டுர் : நீடாமங்கலம்-மன்னார்குடியிலிருந்து 10 கல் தொலைவு. சம்பந்தர் பாடல் மட்டிலும் பெற்ற தலம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஞானசம்பந்தர்.pdf/222&oldid=856084" இலிருந்து மீள்விக்கப்பட்டது