பக்கம்:ஞானசம்பந்தர்.pdf/223

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

180 ஞானசம்பந்தர் கோட்டுர் நற்கொழுந்திடம் விடை பெற்றுக்கொண்டு வெண்டுறை என்ற திருத்தலத்திற்கு வந்தருள்கின்றார் வேணுபுரத்தார். ஆதியனாதிரையன்' (3,61) என்ற செந். தமிழ் மாலை புனைந்து வெண்டுறை யீசனைச் சேவிக் கின்றார். ஊழிகளாய் உலகாய் ஒருவர்க்கும் உணர்வரியான் பேரிளவெண் மதியும்புனலும் மணிபுன் சடையான் யாழின்மொழி யுமையாள் வெருவவ்வெழில் வெண்மருப்பின் வேழமு ரித்தபிரான் விரும்புமிடம் வெண்டுறையே. (6) என்பது இம்மாலையின் ஆறாவது நறுமலர். வெண்டுறை இறைவனிடம் விடைபெற்றுக் கொண்டு தண்டலை நீணெறி' என்ற திருத்தலத்திற்கு எழுந்தருள் கின்றார். விரும்பும் திங்களும் (3.50) என்ற முதற்குறிப் புடைய திருப்பதிகம் பாடி இறைவனைச் சேவிக்கின்றார். இதில், 37. வெண்டுறை (திருவண்டுதுறை): மன்னார்குடியி லிருந்து 6 கல் தொலைவு. சம்பந்தர் பாடல் மட்டிலும் பெற்ற திருத்தலம். - 38. தண்டலை கீனெறி (தண்டலைச்சேரி): மயிலாடு துறை.காரைக்குடி இருப்பூர்தி வழியில் திருத்துறைப் பூண்டி நிலையத்திலிருந்து 2; கல் தொலைவு. இத்தலத். திறைவனுக்கு கல் தொலைவிலுள்ள கணமங்கலத்தி லிருந்து அரிவாட்டாய நாயனார் மாடுவடு செங்கீரை செந்நெல் அமுது முதலியன நிவேத்து வருவதை வழக்க மாகக் கொண்டிருந்தார். ஒருநாள் அவை கமரில் வழுக்கி விழத் தாம் கழுத்தை அரிய முற்பட்டபோது,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஞானசம்பந்தர்.pdf/223&oldid=856086" இலிருந்து மீள்விக்கப்பட்டது