பக்கம்:ஞானசம்பந்தர்.pdf/224

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அப்பர் பெருமானுடன் தலவழிபாடு I31 பரந்த நீலப் படரெரி வல்விடம் கரந்த கண்டத்தி னான்கரு தும்மிடம் சிவந்த பொன்னும் செழுந்தர ளங்களும் கிவந்த தண்டலை ெேனறி காண்மினே. (3) என்பது மூன்றாவது திருப்பாடல். இப்பதிகத்தில் 5,6,7 ஆம் பாடல்கள் காணப்பெறவில்லை. தண்டலை நீனெறிப் பெருமானிடம் விடைபெற்றுக் கொண்டு திருக்களர்’ என்ற திருத்தலத்திற்கு வருகின்றார் காழிப் பிள்ளையார். நீருளார்கயல் (2.51) என்ற முதற் குறிப்புடைய செந்தமிழ்ப் பதிகம் பாடி திருக்களர் இறைவனைச் சேவிக்கின்றார். கோல மாமயி லாலக் கொண்டல்கள் சேர்பொழிற் குலவும் வயலிடைச் சேலி ளங்கயலார் புனல்சூழ்ந்த திருக்களருள் நீல மேவிய கண்டனே நிமிர் புன்சடைப் பெருமா னெனப்பொலி ஆல கீழலுள யடைந்தார்க் கருளாயே. (6) என்பது இச் செந்தமிழ் மாலையில் ஆறாவது வாடா நறுமலர். திருக்களர் இறைவனிடம் விடைபெற்றுக் கொண்டு திருச்சிற்றேமம்' என்ற திருத்தலத்திற்கு எழுந்தருள் கமரில் இறைவன் கை தோன்றி அவர் கழுத்தை அரிவதைத் தடுத்து அவருக்கு முத்தி அளித்த தலம். சம்பந்தர் பாடல் மட்டிலும் பெற்றது. 39. களர் (திருக்களர், பாரிஜாதவனம்): மயிலாடு துறை.காரைக்குடி இருப்பூர்தி வழியில் திருத்துறைப் பூண்டி நிலையத்திலிருந்து 4:கல் தொலைவு. சம்பந்தர் பாடல் மட்டிலும் பெற்ற திருத்தலம். 40 சிற்றேமம் (சிற்றாய்மூர், சிற்றாம்பூர்): மயிலாடு துறை.காரைக்குடி இருப்பூர்தி வழியில் ஆலத்தம்பாடி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஞானசம்பந்தர்.pdf/224&oldid=856088" இலிருந்து மீள்விக்கப்பட்டது