பக்கம்:ஞானசம்பந்தர்.pdf/225

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

182 ஞானசம்பந்தர் கின்றார். நிறைவெண்டிங்கள் (3.42) என்ற செந்தமிழ் மாலை புனைந்து தலத் திறைவனை வழிபடுகின்றார். இதில், பணிவெண் டிங்கள் வாண்முக மாதர் பாடப் பல்சடைக் குனிவெண் டிங்கள் சூடியோ ராடல் மேய கொள்கையான் தனிவெள் விடையன் புள்ளினத் தாமஞ் சூழ்சிற்றேமத்தான் முனிவு மூப்பு க்ேகிய முக்கண் மூர்த்தி யல்லனே. (6) என்பது தமிழ்மணம் மிக்க ஆறாவது வாடா நன்மலர். சிற்றேமத்திலிருந்து ஆளு ைட ய பிள்ளையாரும் ஆளுடைய அடிகளும் அடியார்கள் கூட்டத்துடன் திருமறைக் காட்டெல்லையை அடைகின்றனர். திருமறைக் காட்டுப் பெருமக்களும் அடியார்களும் இவர்கள் வருகையை அறிந்து ஊரைக் கமுகு, வாழை மரங்களாலும் தோரணங் களாலும் அலங்கரித்து குடந்தீபங்கள் வார்முரசம் முதலிய மங்கலநாதங்கள் மல்க எதிர் கொண்டு வரவேற். கின்றனர். இருபெரு மக்களும் மறைக் காட்டுத் தொல்லை மூதூர் புகுந்தபோது அரஹர" என்று மாதவர்களும் நிலையத்திலிருந்து 4 கல் தொலைவு. சம்பந்தர் பாடல் மட்டிலும் பெற்ற தலம். 41. மறைக்காடு (வேதாரண்யம்) : சப்தவிடங்கங். களுள் ஒன்று, புவனி விடங்கர்; ஹம்ஸ்பாத நடனம், வேதங்கள் பூசித்து மூடிவிட்டுப் போயிருந்த கதவுகளைப் பதிகம் பாடி அப்பர் திறக்கவும் சம்பந்தர் மூடவும் செய்த அற்புதத் தலம். தேவாரம் வேதத்திற்குத் தாழ்ந்ததல்ல என்பதைக் கட்புலனாக உலகுக்கு அறிவித்த தலம். மேலைக் கோபுரவாயிலுக் கெதிரிலுள்ள விநாயகர் சந்நிதி மிகு புகழ் வாய்ந்தது. -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஞானசம்பந்தர்.pdf/225&oldid=856090" இலிருந்து மீள்விக்கப்பட்டது