பக்கம்:ஞானசம்பந்தர்.pdf/226

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அப்பர் பெருமானுடன் தலவழிபாடு 183 மறையவர்களும் எடுத்த ஓசை இரு விசும்பும் திசை யெட்டும் பொங்கி எழுகின்றது. மறைக்கதவம் திறத்தலும் அடைத்தலும் : இருபெரு மக்களும் திருமறைக் காட்டுத் திருக்கோயிலை வலஞ் செய்து கோபுரத்துள் நுழைந்து முன்றில் வாயிலை அணுகு கின்றனர். முன்னாளில் அருமறைகள் சிவபெருமானை வழிபட்டு திருக்காப்பிடப்பெற்ற திருக்கதவை அம்மறை களை அன்புடன் ஒதும் அடியார்கள் ஒருவரும் திறக் காததால் அவ்வாயில் அடைக்கப்பட்டே இருப்பதையும், அன்பர்கள் வேறோர் பக்கம் வாயில் அமைத்து அவ்வழியே வழிபாடு செய்து வருவதையும் அடியார்கள் மூலம் அறிகின்றனர். காழிப் பிள்ளையார் சொல்வேந்தரை நோக்கி, அப்பரே, மறைக் காட்டுப் பெருமானை எப்படியும் இவ்வழியாகச் சென்று நாம் வழிபடுதல் சிறப்பு: இத்திருக் கதவு திறக்கும்படி நீரே செந்தமிழ்ப்பதிகம் பாடியருளுவீர்' என வேண்ட, அவரும் பிள்ளையாரின் திருவுளக் குறிப்பிற்கிசைந்து பண்ணினேர் மொழியாள்' (5.10) என்று எடுத்து, கண்ணி னாலுமைக் காணக் கதவினை திண்ண மாகத் திறந்தருள செய்மினே, (I) என்று பாடிப் போற்றுகின்றார். பாடல்களின் பொருட் சுவையினைத் துய்க்க விரும்பிய மறைக்காட்டு இறைவன் பதிகம் முடியுமளவும் திருக்கதவைத் திருக்காப்பு நீக்கத் தாழ்ந்தருளுகின்றார்; இதுகண்டு வருத்தமுற்ற அப்பர் பெருமான், அரக்க னைவிர லால் அடர்த் திட்டநீர் இரக்க மொன்றிலீர் எம்பெரு மானிரே. (II) என்ற இறுதிப் பாடலைப் பாடியதும் கதவின் திருக்காப்பு நீங்கித் திறந்துகொள்ளுகின்றது. இருபெருமக்களும் அ ள வி லா மகிழ்ச்சியடைந்து அடியார்களுடன் திருக்கோயிலில் புகுந்து இறைவன்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஞானசம்பந்தர்.pdf/226&oldid=856092" இலிருந்து மீள்விக்கப்பட்டது