பக்கம்:ஞானசம்பந்தர்.pdf/227

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

184 ஞானசம்பந்தர் திருமுன்னர் வீழ்ந்திறைஞ்சி செந்தமிழ் மாலைகள் சாத்திப் போற்றுகின்றனர். மறைக்காட்டு மணாளரை வழிபட்டு வெளியே வந்த பின் அரசர் பிள்ளையாரை நோக்கி, இத் திருக்கதவம் அடைக்கவும் திறக்கவும் அமையும்படி பாடி யருளுவீர்' என வேண்டுகின்றார். பிள்ளையாரும் சதுரம் மறை (2-37) என்ற முதற்குறிப்புடைய திருப் பதிகத்தின், - சதுரம் மறைதான் துதிசெய்து வணங்கும் மதுரம் பொழில்சூழ் மறைக்காட் டுறைமைந்தா இதுகன் கிறைவைத் தருள்செய்க எனக்குன் கதவக் திருக்காப்புக் கொள்ளும் கருத்தாலே. (1) என்ற முதற்பாடலைப் பாடியவுடன் திருக்கதவு மூடிக் கொள்ளுகின்றது. இதனைக் கண்ட அரசரும் அடியார் களும் இறைவன் திருவருட்டிறத்தை வியந்து போற்று கின்றனர். பிள்ளையார் இத் திருப்பதிகத்தின் ஏனைய பாடல்களையும் பாடித் திருக்கடைக் காப்புச் சாத்து கின்றார். பின்னர் இருபெருங்குரவர்களும் அடியார் களுடன் அங்குள்ள திருமடத்தில் தங்குகின்றனர். வாய்மூர் இறைவன் ஆடல் காட்டல் : அருமறைகளால் மூடப்பெற்ற கதவு தம்மால் அரிதில் திறக்கப் பெற்றதும், பிள்ளையாரால் எளிதில் அடைக்கப் பெற்றதுமாகிய இரு நிகழ்ச்சிகளையும் எண்ணுகின்றார் நாவுக்கரசர். தாம் இறைவன் திருக்குறிப்பறியாது திறக்கப் புகுந்தது தவறெனக் கருதிய உள்ளத்தினராய்த் திருமடத்தின் ஒருபால் துயில் கொண்டிருக்கும்போது சிவபெருமான் சைவ வேடத்துடன் அரசர் முன் தோன்றுகின்றார். நாம் திருவாய்மூரில் இருப்போம். எம்மைப் பின்தொடர்ந்து 42. வாய்மூர் : மயிலாடுதுறை . காரைக்குடி இருப் பூர்திவழியில் திருநெல்லிக்கா என்ற நிலையத்திலிருந்து 8 கல் தொலைவு. அப்பருக்கு வருமாறு இறைவன் கட்டளை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஞானசம்பந்தர்.pdf/227&oldid=856094" இலிருந்து மீள்விக்கப்பட்டது