பக்கம்:ஞானசம்பந்தர்.pdf/228

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அப்பர் பெருமானுடன் தலவழிபாடு 185 வருக எனக் கூறிப் போகின்றார், அவரைக் கண்ட பொழுதே அவர்பால் ஈர்க்கப்பெற்று தலைமேல் கூப்பிய கையினராய பேரார்வத்துடன் அவரைப் பின்தொடர் கின்றார். இங்ங்ணம் சொல்வேந்தரை இட்டுச் சென்ற இறைவன், அண்மையில் இருப்பவர்போல் காட்டி நெடுந் தூரம் சென்று வழியிடையே மறைந்தருளுகின்றார். இந்நிலையில், திருமறைக்காட்டில் திருமடத்தில் தங்கி யிருந்த காழிப்பிள்ளையார் நாவுக்கரசரைக் காணாமல் *அவர் திருவாய்மூருக்கு ஏகினார்' என்று அடியார்கள் மூலம் அறிந்து அவரைத் தேடிக்கொண்டு திருவாய்மூரை நாடுகின்றார். வழியிடையே தம்மை இட்டுப் போந்த இறைவனைக் காணாது வருத்தமுற்ற நாவுக்கரசர், தம்மைத் தேடிவரும் ஞானக் கன்றைக் கண்டு மகிழ் கின்றார். திருவருட் குறிப்பினையறியாது கதவினைத் திறக்க முற்பட்ட என்னைப் போலின்றி தொண்டின் நிலைமை நன்கு செறியப்பாடி அடைப்பித்த ஞானக்கன்று இதோ வந்து நிற்கின்றார். வாய்மூர்ப் பெருமான் என்னை யன்றி இவரையும் மறைந்து நிற்கவல்லரோ?” என வினவும் முறையில், திறக்கப் பாடிய என்னினும் செந்தமிழ் உறைப்புப் பாடி அடைப்பித்தார் உக்கின்றார் மறைக்க வல்லரோ தம்மைத் திருவாய்மூர்ப் பிழைகொள் செஞ்சடை யாரிவர் பித்தரே. (5.50:8) என்ற திருக்குறுந்தொகையைப் பாடிப் போற்றுகின்றார். அப்போது வாய்மூர் அடிகள் பிள்ளையாருக்கு எதிரில் தோன்றி ஆடல்காட்டி அருள் புரிகின்றார். பிள்ளையார் தாம் கண்ட அற்புதத் தெய்வக் காட்சியைத் தளரிள யிட, அவர் சென்று தரிசித்ததை 5'50:1, 5.50:2 என்ற பாசுரங்கள் கூறும். சப்தவிடங்கங்களுள் இங்குக் கமல. நடனம் புரியும் நீலவிடங்கர் உள்ளார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஞானசம்பந்தர்.pdf/228&oldid=856096" இலிருந்து மீள்விக்கப்பட்டது