பக்கம்:ஞானசம்பந்தர்.pdf/307

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

266 ஞானசம்பந்தர் மண்ணார்ந்தன அருவித்திரள் மழலைம் முழவ திரும் அண்ணாமலை தொழுவார்வினை வழுவாவண்ண மறுமே. (t ) என்பது முதற்பதிகம். இப்பதிகம் அறையணி நல்லூரில் இருந்த வண்ணமே பாடியது என்பது முன்னமே குறிப் பிட்டுள்ளோம்; அதனை ஈண்டு நினைவு கூரலாம். ‘பூவார் மலர் கொண்டு (1.69) என்ற முதற்குறிப் புடைய திருப்பதிகம் இத்திருத்தலப் பெருமான்மீது எழுந்த இரண்டாவது பதிகமாகும். எனைத்தொ ருழி அடியா ரேத்த இமையோர் பெருமானார் நினைத்துத் தொழுவார் பாவம் தீர்க்கும் கிமலர் உறைகோயில் கனைத்த மேதி காணாது ஆயன் கைம்மேற் குழலூத அனைத்தும் சென்று திரளும் சாரல் அண்ணா மலையாரே. (6) என்பது இதில் ஆறாவது திருப்பாடலாகும். பாடலின் இறுதி இரண்டு அடிகளில் காட்டப் பெறும் ஆயன் செயல் அநுபவித்து மகிழத் தக்கது. சம்பந்தர் சில நாட்கள் இத்தலத்தில் தங்கியிருக்கின்றார். இத்துடன் நடுநாட்டுத் திருத்தல வழிபாடு நிறைவு பெறுகின்றது. நடுநாட்டுத் திருத்தலங்கள் இருபத் திரண்டினுள் ஐந்தன் வழிபாடு வேறொரு சந்தர்ப்பத்தில் நிறைவு பெற்றதை மேலே குறிப்பிட்டோம். எஞ்சியுள்ள பதினேழு தலங்களுள் பத்தின் வழிபாட்டை இந்தப் பயணத்தில் நிறைவு செய்துவிடுகின்றார். இன்னும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஞானசம்பந்தர்.pdf/307&oldid=856276" இலிருந்து மீள்விக்கப்பட்டது