பக்கம்:ஞானசம்பந்தர்.pdf/365

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

324 ஞானசம்பந்தர் 11. சில திருப்பதிகங்களில் அருந்தமிழின் பொருள்: ஆகிய அகப் பொருட்டுறை யமைதி சிறப்பிடம் பெற்றுள்ளன. (எ.டு.) வழுவாள் பெருமான் கழல்வாழ் கவெனா எழுவாள் நினைவாள் இரவும் பகலும் மழுவாள் உடையாய் மருகற் பெருமான் தொழுவாள் இவளைத் துயராக் கினையே. (2.18:7) திருத்தாயார் தம் மகள் நிலையை திருமருகலில் எழுந் தருளியிருக்கும் பெருமானை நோக்கிப் பேசுவது. இங்ங்னம் பல பதிகங்கள் உள்ளன." 12. காழிப்பிள்ளையார் தம்மை ஆட்கொண்டருளிய இறைவனை நோக்கியும் அவன்பால் அன்புடைய அடியார் களை நோக்கியும் இறைவனது இயல்பினைக் குறித்து வினவும் முறையில் சில திருப்பதிகங்கள் அமைந்துள்ளன. வினவும் முறையில் அமைந்த அத் திருப்பதிகங்கள் வினாவுரை என்றே குறிக்கப் பெற்றுள்ளன. (எ.டு.) சதுரம் மறைதான் துதிசெய்து வணங்கும் மதுரம் பொழில்சூழ் மறைக்காட் டுறைமைந்தா இதுகன் கிறைவைத் தருள் செய்க எனக்குன் கதவக் திருக்காப்புக் கொள்ளுங் கருத்தாலே. . (2.37:1). என்று மறைக்காட்டிறைவனை வினவுவதாக அமைந் துள்ளது. வினவி னேனறியாமையில்லுரை செய்மிம்னிரருள் வேண்டுவீர் கனைவி லார்புனற் காவி. ரிக்கரை, மேய கண்டியூர் வீரட்டன் 2. i. 44, 56, 63, 73, 76. H. 18, 23 (106-$)ái, 6, 7 பாடல்கள்) 11. 63, 100 பதிகங்கள் காண்க:

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஞானசம்பந்தர்.pdf/365&oldid=856404" இலிருந்து மீள்விக்கப்பட்டது