பக்கம்:ஞானசம்பந்தர்.pdf/366

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அருளிச் செயல்கள் 3.25 தனழு னேதனக் கின்மை யோதம ராயினா ரண்ட மாளத்தான் வனனில் வாழ்க்கைகொண் டாடிப் பாடிஇவ் வைய மாப்பலி தேர்ந்ததே. (3.38: ty இஃது அடியாரை நோக்கி வினவுவது. :வினாவுரை என்ற பெயர் பிள்ளையாராலேயே இட்ட பெயர் என்பதை அருத்த னைத்திறம் அடியர் பால்மிகக் கேட்டு கந்த வினாவுரை' (3.38:11) என்ற இப்பதிகத் திருக்கடைக் காப்பால் அறியலாம்." புராணச் செய்திகள்: சண்டை வேந்தரின் அருளிச் செயல்களில் பல புராண வரலாற்றுச் செய்திகள் காணப் பெறுகின்றன. அவை: இறைவன் உபமன்ய முனிவர்க்குப் பாற்கடல் ஈந்தது, குபேரனைத் தோழனாகக் கொண்டது, சலந்தரனைச் சக்கரத்தால் தலையரிந்தது, சக்கரப் படையைத் திருமாலுக்களித்தது, நஞ்சுண்டு தேவர்களை உய்யக் கொண்டது, திரிபுரம் எரித்தது, தக்கனது வேள்வியை அழித்தது. யானைத் தோலை உரித்துப் போர்த்தது, தாருகாவனத்து முனிவர் மகளிரது நிறையழிய ஒடேந்து செல்வராய்ப் பிச்சையேற்றது, அயனும் மாலும் அடிமுடிதேட அன்னோர் அறியா வண்ணம் தீப்பிழம்பாப் உயர்ந்தது, நான்முகனது தலையைக் கிள்ளியது, மார்க்கண்டேயர்க்காகக் கூற்றுவனை வதைத்தது, காமனை எரித்தது முதலிய புராணச் செய்திகள் ஆகும். தேவாரம்-மறைமொழிகள்: ஞானசம்பந்தப் பெருமான் தம் செயலற்றுத் தான் என்னும் உயிர் முனைப்பு அடங்கப் பெற்றவர். உயிர்க்குயிராய்த் திகழும் சிவபெரு 3. 1. 4,5,77; 11. 1,2,4,36; 111.38 பதிகங்கள் வினாவுரை யாகக் குறிப்பிடப் பெற்றுள்ளன. 11.37, 114.47, 108 பதிகங்கள் இறைவனை நோக்கி வினாவும் முறையில் அமைந்துள்ளன.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஞானசம்பந்தர்.pdf/366&oldid=856406" இலிருந்து மீள்விக்கப்பட்டது