பக்கம்:ஞானசம்பந்தர்.pdf/367

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

326 ஞானசம்பந்தர் மானின் திருவருள் வழி ஒட்டி வாய்ந்த செம்புலச் செல்வர். ஆகவே, அப்பெருமான் அருளிச் செய்த திருப்பாசுரங்கள் யாவும் சிவபெருமான் அருளிச் செய்த மறைமொழி களாகவே கொண்டு போற்றத்தக்கவை என்று போற்றுவர் பெரியோர். சண்பை வேந்தரே, மலையினார் பருப்பதம் துருத்தி மாற்பேறு மாசிலாச் சீர்மறைக் காடுகெய்த் தானம் நிலையினான் எனதுரை தனதுரையாக றேணிந் தேறுகந் தேறிய கிமலன். (1.76:1). எனவரும் இலம்பையங் கோட்டுர்த் திருப்பதிகத்தால் தாம் பாடிய திருப்பாடல்கள் யாவும் இறைவன் தன்னவையாகக் கொண்ட குறிப்பை எடுத்துகாட்டுவது அறிந்து மகிழத் தக்கதாகும். என்னைத் தன்னாக்கி, என்னால் தன்னை இன் தமிழ் பாட ஈசனை (திருவாய் 7.9:1) என்றும், என்சொல்லால் யான்சொன்ன இன்கவி என்பித்துத் தன்சொல்லால் தான்தன்னைக் கீர்த்தித்த மாயன். (ഔ 7-9:2) என்றும் நம்மாழ்வார் அருளியதை மனத்திற் கொண்டு திருவாய் மொழியை வைணவர்கள் இறைவனின் வாய் மொழியாகக் கருதித் தமிழ் மறை" என்று போற்றுவதை ஈண்டு எனதுரை தனதுரையாக என்பதனோடு ஒப்பிட்டுச் சைவர்கள் ஞானக்கன்றின் வாக்கைத் தமிழ் மறையாகவே கொண்டு போற்றுவது மிகவும் பொருத்தமாகும். இவை இரண்டும் நிறை மொழி மாந்தர் ஆணையிற் கிளந்த மறை மொழிகளன்றோ?'

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஞானசம்பந்தர்.pdf/367&oldid=856408" இலிருந்து மீள்விக்கப்பட்டது