பக்கம்:ஞானசம்பந்தர்.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2. பிள்ளையாரின் கன்னித் திருத்தலப் பயணம் திருக்கோலக்காவில் பொற்றாளம் பெற்ற சம்பந்தர் பெருமான் சீகாழிக்குத் திரும்பி வந்ததும் அவருடைய இசைப்பெருமை பல இடங்களுக்கும் பரவியது. சீகாழிக்கு அருகிலுள்ள சம்பந்தரின் தாயார் பிறந்த ஊரான கனி பள்ளிக்கும். இவர் பெருமை எட்டியது வியப்பில்லை. ஆகையால் அவ்வூரிலுள்ள அந்தணர்கள் மூவாண்டுப் பருவத்தில் அருள் ஞானம் பெற்ற பிள்ளையாரது அற்புத நிகழ்ச்சியைக் கேட்டு மகிழ்ந்து மங்கல வாத்திய ஒலிகள் முழங்க, சீகாழிப்பதியை அடைந்து திருஞான சம்பந்தரின் திருவடிகளைப் பணிந்து போற்றுகின்றனர். தமது :ஊருக்கு எழுந்தருள வேண்டும் எனப் பிள்ளையாரை வேண்டுகின்றனர். அவர்களது வேண்டுகோட் கிணங்கிய காழிப் பிள்ளையார் தோணிபுரத்து இறைவன்பால் விடை பெற்றுத் தாமரை மலர்போலும் தம் மெல்லிய பாதங்கள் தரைமீது பட்டு வருந்த நனி பள்ளியை நோக்கி நடக் 1. கனி பள்ளி (புஞ்சை): மயிலாடுதுறை.தரங்கம்பாடி இருப்பூர்தி வழியிலுள்ள செம்பொன்செய் கோயில் என்ற நிலையத்திலிருந்து 2 கல் தொலைவு. சம்பந்தர் தாயார் பிறந்த ஊர். தந்தையார் தோளிலிருந்த வண்ணம் தம்மேல் ஆண்ை வைத்துப் பாடிய தலப்பதிகம் சிறப்புடையது. இவ்வூர்த் திருக்கோயிலில் எழுந்தருளி யிருக்கும் எம்பெருமானின் திருநாமம் நற்றுனையப்பர் என்பது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஞானசம்பந்தர்.pdf/60&oldid=856499" இலிருந்து மீள்விக்கப்பட்டது