பக்கம்:ஞானசம்பந்தர்.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

#6 ஞானசம்பந்தர் கின்றார். இதனைப் பிள்ளையாரின் திருத்தலப் பயணத்தின் முதல் சுற்றாகக் கருதலாம். ஆளுடைய பிள்ளையார் அடிமலர் வருந்த நடப்பதும் அவரைப் பிறர் எடுத்துச் செல்வதும் பொறாத அவரது திருத்தந்தையார் பிள்ளையாரைத் தமது தோளின்மேல் அமர்த்திக் கொண்டு செல்லுகின்றார். இதனைச் சேக்கிழார் பெருமான், தாதவிழ்செந் தாமரையின் அகவிதழ்போல் சீரடிகள் தரையின் மீது போதுவதும் பிறர்தருவர் பொறுப்பதுவும் பொறாஅன்பு புரிந்த சிங்தை . மாதவஞ்செய் தாதையார் வந்தெடுத்துத் தோளின்மேல் வைத்துக் கொள்ள காதர்கழல் தம்முடிமேல் கொண்டகருத் துடன் போந்தார் ஞானம் உண்டார் (ஞானசம்பந். 113) என்று காட்டுவர். தந்தையார் தோளில் அமர்ந்து செல்லும் பிள்ளையார் நனிபள்ளியை நெருங்கிய நிலையில் அந்நகரைச் சுட்டிக் காட்டி எதிரே தோன்றுவதாகிய இப்பதி யாது? எனத் தந்தையாரை வினவுகின்றார். தந்தையாரும் இதுதான் நனி பள்ளி என்கிறார். தந்தையாரின் திருத்தோளில் இருந்த வண்ணம் அத்திருப்பதியைத் தொழுது காரைகள் கூகை முல்லை' (2. 84) என்ற முதற் குறிப்பையுடைய திருப்பதிகம் பாடிப் போற்றுகின்றார். இதில், காரைகள் கூகைமுல்ல்ை களவாகை வீகை படர்தொடரி கள்ளி கவினிச் சூரைகள் பம்மி விம்மு சுடுகா டமர்ந்த சிவன்மேய சோலை நகர்தான் தேரைகள் ஆரைசாய மிதிகொள்ள வாளை குதிகொள்ள வள்ளை துவன தாரைகள் ஆரல்வாரி வயன்சேதி வைகு நனிபள்ளி போலும் கமர்காள் {1}

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஞானசம்பந்தர்.pdf/61&oldid=856501" இலிருந்து மீள்விக்கப்பட்டது