பக்கம்:ஞானசம்பந்தர்.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பிள்ளையாரின் கன்னித் திருத்தலப் பயணம் 17 என்பது முதற்பாடல். இதில் முதலிரண்டடிகளில் பாலை நில இயல்பும், பின்னிரண்டடிகளில் நெய்தல் நில இயல்பும், இவ்வாறே பின்வரும் பாடல்கள் எல்லாவற்றிலும் மருத நிலத்தோடு தொடர்புடைய நெய்தல் நில இயல்பும் கூறப் பெற்றிருத்தலால் இத்திருப்பதிகம், பாலை நிலமாக இருத்த நனிபள்ளி வளமுடைய நெய்தல் நிலமாக மாறும்படி பாடி, யருளப் பெற்றதென்ற செய்தி நெடுங்காலமாக வழங்கப் பெற்று வருகின்றது. திரு தனிபள்ளியை அடைந்த காழிப் பிள்ளையார் அவ்வூர் மக்கள் வேண்டுகோட்கிணங்க வளமற்ற பாலை நிலமாகிய அவ்வூர் வளமான நெய்தல் நிலமாக மாறும்படி திருப்பதிகம் பாடியருளினார் என்ற வர லாற்றினைப் பின்வந்த நம்பியாண்டார் நம்பி ஆளுடைய பிள்ளையார் திருவந்தாதி, திருச்சண்டை விருத்தம், திருவுலா மாலை, திருத்தொகை என்று தாம் இயற்றிய நூல் களிலும், திருக்கடவூர் உய்ய வந்த தேவநாயனார் தம் திருக்களிற்றுப்படியாரிலும் குறிப்பிட்டுப் போற்றியுள்ளனர். இத்துணைச் சிறப்புடைய இந்நிகழ்ச்சியைச் சேக்கிழார் பெருமான் தம் நூலில் குறிப்பிடவில்லை. ஆனால் சம்பந்தர் தமது தந்தையாரின் தோளின்மேல் அமர்ந்த நிலையில் பாடினார் என்பதும், நனிபள்ளி உள்குவார்தம் பேரிடர் கெடுதற்கு ஆணை தமது என்றும் இறுதி மொழியைக் கூறினார் என்பதும் இப்பதிகத் திருக்கடைக் காப்புச் செய்யுளால் இனிது விளங்குகின்றது. தவிர, பிள்ளையார் திருநனிபள்ளிக்குப் போகும் பொழுது தாமே நடந்து செல்ல இயலாத இளம்பருவத்தினரா யிருந்தமை திருக்கடைக் காப்பினால் நன்கு துணியப்படும். இத்தேவாரத் திருப்பதிகத்தில் நெய்தல், பாலை நிலப் பொருள்கள் வந்து, பின் மருத நிலத்திற்குரிய அடையாளங் களும் வருவதால் இலக்கியப் புலவர்கள் தம் கற்பனைக்கு இடம் தந்து வருணனை செய்துவிட்டார்கள். ஆனால் சேக்கிழார் பெருமான் இங்ங்ணம் செய்யவில்லை, 2

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஞானசம்பந்தர்.pdf/62&oldid=856503" இலிருந்து மீள்விக்கப்பட்டது