பக்கம்:ஞானசம்பந்தர்.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

#8 - ஞானசம்பந்தர் முன்னோர் தோற்றுவித்த மரபைப் பின்னோர் போற்றுவது என்ற வழக்கத்தையும் மேற்கொள்ளவில்லை. இன்றும் அது பாலையாகவே காட்சி அளிப்பதுபோல் சேக்கிழார் காலத்திலும் இதே நிலையில் இருந்திருக்க வேண்டும். இதனால்தான் இப்பெருமான் இந்த ஊர்பற்றித் தமது கற்பனைக்கு இடங் கொடுக்கவில்லை என்று நினைக்கத் தோன்றுகின்றது. நனிபள்ளி என்ற திருப்பெயர் இவ்வூருக்கு எப்படி ஏற்பட்டதோ? தெரியவில்லை. ஆனால் பள்ளி என்பது சமணர் இருக்கை என்பதனை நாம் அறிவோம். சம்பந்தர் காலத்தில் சமணர்கள் இப்பகுதியில் அதிகமாக வாழ்ந் திருக்கலாம் என நினைக்கத் தோன்றுகின்றது. பல்லவர்கள் பாடலிபுரத்தை (கடலூர்) தலைநகராகக் கொண்டு ஆண்டதை நாம் அறிவோம். அக்காலத்தில் சமணர்களின் செல்வாக்கும் அதிகமாக இருந்து இப்பகுதியில் பள்ளிகள் அமைந்திருக்கலாம்; இதுகாரணமாக நளிைபள்ளி' என்ற திருப்பெயர் ஏற்பட்டிருக்கலாம் என்று கருத இடம் உண்டு. சம்பந்தப் பெருமான் நனிபள்ளியில் அதிகம் தங்க வில்லை. தம் அன்னையாரின் உறவினர்களைக் கண்டு அளவளாவி மகிழ்ந்தவுடன் நளிபள்ளி ஈசனிடம் விடை பெற்றுக் கொண்டு தலைச்சங்காடு என்ற திருத்தலத்திற்கு வருகின்றார். வந்தவர் கலச்சங்க வெண்குழை (2.55) என்ற முதற் குறிப்புடைய திருப்பதிகம் பாடி மகிழ்கின்றார். இதில், - அடிபுல்கு பைங்கழல்க ளார்ப்பப் போந்தோ ரனல் ஏந்திக் கொடிபுல்கு மென்சாயல் உமையோர் பாகங் கூடினிர் 2. தலைச்சங்காடு : மயிலாடுதுறை - தரங்கம்பாடி இருப்பூர்தி வழியிலுள்ள ஆக்கூர் நிலையத்திலிருந்து 3 கல் தொலைவு. மயிலாடுதுறையிலிருந்து ஆக்கூர் செல்லும் பேருந்து மூலம் வந்து திரும்புவதே சிறந்தது; எளிதானது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஞானசம்பந்தர்.pdf/63&oldid=856505" இலிருந்து மீள்விக்கப்பட்டது