பக்கம்:ஞானசம்பந்தர்.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பிள்ளையாரின் கன்னித் திருத்தலப் பயணம் $9 பொடிபுல்கு நூல்மார்பர் புரிநூ லாளர் தலைச்சங்கைக் கடிபுல்கு கோயிலே கோயி லாக கினைந்தீரே. (7) என்பது ஏழாம் திருப்பாடல். பழங்காலத்தில் காவிரிப்பூம் பட்டினத்திலிருந்து (தலைச்சங்காட்டிலிருந்து 3 கல் தொலைவிலுள்ளது) சிறந்த சங்குகள் இங்கு விற்பனை செய்யப் பெற்றதால் இவ்விடத்தைத் தலைச்சங்கம் என்று வழங்கினர். இவ்விடத்தைச் சுற்றிலும் புரச (பலாச) மரக் காடாக இருந்தமையால் இவ்விடத்தைக் காடு' என்றும் வழங்கினர். நாளடைவில் இவ்விரண்டு பெயர்களும் சேர்ந்து தலைச் சங்கக் காடு என்ற திருப்பெயராக வழங்கலாயிற்று. காலப் போக்கில் மக்கள் வாக்கில் இத் திருப்பெயர் மருவி தலைச்சங்காடு' என்ற பெருவழக்குப் பெறலாயிற்று. இவ்வூருக்கு அருகில் திருவெண் காடு" என்ற ஊரும் இருப்பதால் காடு’ என்ற முடிவு பொருந்து வதாகக் கருதலாம். திருமங்கையாழ்வாரும் தலைச் சங்கம் என்றே தம் பாசுரத்தில் (பெரி. திரு. 8,9:9) || குறிப்பிடுகின்றார்.8 தலைச்சங்காடரிடம் விடைபெற்றுக் கொண்டு வலம் புரம்' என்ற திருத்தலத்திற்கு வருகின்றார் பிள்ளையார். கொடியுடை மும்மதில் (3103) என்ற முதற்குறிப்புடைய திருப்பதிகத்தால் இத்தலத்து எம்பெருமானை வழிபடு கின்றார். இதில், - 3. 1968 ஜூன் மாதம் தலைச்சங்க நாண்மதியத்தைச் சேவித்தபோது தலைச்சங்காட்டுக் கோயிலைப் பேருந்தில் செல்லும்போதே சேவித்தேன். 4. வலம்புரம் (பெரும்பள்ளம்) சீகாழியிலிருந்து 8 கல் தொலைவிலுள்ளது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஞானசம்பந்தர்.pdf/64&oldid=856507" இலிருந்து மீள்விக்கப்பட்டது