பக்கம்:ஞானசம்பந்தர்.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

Žs; (ஞானசம்பந்தர் புரிதரு புன்சடை பொன்தயங்கப் புரிநூல் புரண்டிலங்க விரைதரு வேழத்தி வீருரித்தோல் மேல்மூடி வேய்புரைதோள் அரைதரு பூந்துகி லாரணங்கை அமர்ந்தார் இடம்போலும் வரைதரு தொல்புகழ் வாழ்க்கையறி வலம்புற தன்னகரே (7) என்பது எழாம் திருப்பாடல். வலம்புர ஈசுவரரிடம் விடை பெற்றுக்கொண்டு காவிரிப்பூம் பட்டினம் வருகின்றார். இவ்வூர்ப் பல்லவனிச் சரம் என்ற திருக்கோயிலில் எழுந்தருளியிருக்கும் சிவு பெருமானைச் சேவிக்கின்றார். இப்போது தொடுத்த செந்தமிழ்ப் பதிகம் அடையார்தம் புரங்கள்" (1. 65) என்ற முதற் குறிப்புடையது. இதில், மங்கை யங்கோர் பாகமாக வாணில வார்சடைமேற் 5. காவிரிப்பூம் பட்டினம்: இங்குள்ள கோயில் பல்ல வணிச்சரம் என்பது, பல்லவவேந்தன் திருப்பணி செய்த பின்பு இத்தலத்திற்கு இப்பெயர் வழங்கலாயிற்று. இவ்வூர் கோழியிலிருந்து 10 கல் தொலைவிலுள்ளது. சங்ககாலத் தில் கரிகாற் பெருவளத்தான் அரசு புரிந்த தலைநகரம் (புகார்) என்பது இதுவே. இங்கிருந்த துறைமுகம், நடை பெற்ற வாணிகம், மக்கள் செல்வநிலை முதலியவற்றைப் :பட்டினப்பாலை என்ற பாட்டில் காணலாம். கோவலன், கண்ணகி, மாதவி, மணிமேகலை முதலியோர் வரலாற்றுத் தொடர்புடையது. துதல்விழி நாட்டத் திறையோன் முதலாப் பதிவாழ் சதுக்கபூதம் ஈறாக எல்லாக் கடவுள் கோயில்களும் திகழ்ந்த நகர். சிலம்பு கூறும் பிறவா யாக்கைப் பெரியோன் கோயில் தான் பல்லவனீச்சர மாகக் கருத இடம் உண்டு. இங்கு இந்திர விழா மிகச்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஞானசம்பந்தர்.pdf/65&oldid=856509" இலிருந்து மீள்விக்கப்பட்டது