பக்கம்:ஞானசம்பந்தர்.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பிள்ளையாரின் கன்னித் திருத்தலப் பயணம் 2慧” கங்கை யங்கே வாழவைத்த கள்வன் இருந்த இடம் பொங்க யஞ்சேர் புணரியோத மீதுயர் பொய்கையின்மேல் பங்க யஞ்சேர் பட்டினத்துப் பல்லவ வீச்சரமே. (3) என்பது மூன்றாவது பாடல். பட்டினப்பாலையிலும் சிலம்பிலும் மேகலையிலும் கண்ட பட்டினத்தை கற்பனை அயில் தான் காணமுடியும். இன்று பழைய கோயில்கள், அவற்றையடுத்துச் சில குடில்கள், கடலருகே சில மீனவர் குடும்பங்கள் இவைதாம் இன்றைய காவிரிப்பூம் பட்டினம். தவிர, தமிழக அரசு ஏற்படுத்திய நினைவுச் சின்னங் களும் உள்ளன. தேவாரம் எழுந்த மூவர் காலத்திற்கு முன்பே பண்டைய காவிரிப்பூம் பட்டினம் தனது எழிலை இழந்து விட்டது. சம்பந்தர் பெருமான் சேவிக்க வந்தபோது இருந்த கோயில்தான் பல்லவனிச்சரம். இவரும் இத்திருக் கோயிலைப்பற்றிச் சிறப்பாக ஒன்றும் சொல்லவில்லை. அண்மையில் உள்ள சாய்க்காட்டைச் சேவித்த நாவுக்கரசர் பெருமானும் காவிரிப்பூம் பட்டினத்தைப் பற்றிய பேச்சையே எழுப்பவில்லை. சேக்கிழார் காலத்தில் தில்லை யையும் திருவாரூரையும் வருணித்ததுபோல் காவிரிப்பூம் பட்டினத்தை வருணிக்கவில்லை. கன்னெ டும்பெருங் தீர்த்தமுன் னுடையது கலஞ்சி றந்தது வளம்புகார் ககரம் சிறப்பாக நடைபெற்றதைச் சிலப்பதிகாரம் - புகார் காண்டத்துள் காணலாம். கடல் கொண்டதால் முடிவுற்ற புகார் நகரச் சிதைவு இன்றும் கடலுட் காணப்படுகின்றது. இயற்பகை நாயனாரும் பட்டினத்தடிகளும் வாழ்ந்த திருத்தலம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஞானசம்பந்தர்.pdf/66&oldid=856511" இலிருந்து மீள்விக்கப்பட்டது