பக்கம்:ஞானசம்பந்தர்.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

22 ஞானசம்பந்தர் என்று மட்டும் இயற்பகை நாயனார் புராணத்தில் குறிப் பிட்டுள்ளார். ஆகவே, எத்தனையோ நூற்றாண்டுகளுக்கு முன்னரே இப்பட்டினம் சிதைந்தழிந்திருத்தல் வேண்டும். பல்லவனீச்சர இறைவனை பரசு பாணியர் (3. 1.12) என்ற முதற்குறிப்புடைய இன்னொரு பதிகத்தாலும் ஏத்திப் போற்றுகின்றார். பச்சைமேனியர் பிச்சைகொள்பவர் பட்டினத்துறை பல்லவனீச்சரத் திச்சையா யிருப்பாரிவர் தன்மையறி வாரார் (6) என்பது இதில் ஆறாவது பாடல். பல்லவனீச்சரத்தினின்றும் சாய்க்காடு என்னும் திருத் தலத்திற்கு வருகின்றார் சண்பை வேந்தர். சாய்க்காடு இறைவனை இரண்டு பதிகங்களால் வழுத்துகின்றார். ஆண்புகார் (2. 41) என்ற முதற்குறிப்புடைய பதிகத்தில், 6. காய்க்காடு (சாயாவனம்). இது பல்லவனிச் சரத்துக் கருகிலேயே உள்ளது. இது சீகாழியிலிருந்து 9 கல் தொலைவு: ஆக்கூரிலிருந்து 5 கல் தொலைவு; திருவெண் காட்டிலிருந்து கல் தொலைவு. இஃது ஒரு மாடக் கோயில், கோச்செங்கணான் என்ற சோழவேந்தன் 70 மாடக் கோயில்களைக் கட்டியதாக வரலாறு. சுவாமி: சாயானே சுவரர்; அம்பாள்: குயிலு தன் மொழியாலம்மை, கோஷாம் பாள். இந்த் சாயாவனத்தில் வைத்துதான் இயற்பகை நாயனார் தமது மனைவியை அடியார் ஒருவருக்குக் கொடுத்துத் திரும்பியதாக ஐதிகம். இதற்கு வடக்கில் மேலூர் என்ற பெரும் பள்ளத்திலுள்ள சுவாமியின் பெயர் பிரியா வணங்கீசுவரர். இங்குதான் இயற்பகையின் மனைவியைத் தனியே விட்டு அடியாராக வந்த இறைவன் பிரிந்தார். , -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஞானசம்பந்தர்.pdf/67&oldid=856512" இலிருந்து மீள்விக்கப்பட்டது