பக்கம்:ஞானசம்பந்தர்.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பிள்ளை யாரின் கன்னித் திருத்தலப் பயணம் 25 நயந்தவர்க் கருள்பல நல்கி பிந்திரன் கயந்திரம் வழிபட கின்ற கண்ணுதல் வியந்தவர் பரவுவெண் காடு மேவிய பயக்தரும் மழுவுடை பரம ரல்லரே (7) என்பது ஏழாவது திருப்பாடல், வெண்காட்டிலிருக்கும்போது சில தலங்கள் நினைவிற்கு வருகின்றன. வெண்காட்டு இறைவனிடம் விடை பெற்றுக் கொண்டு கீழைத் திருக்காட்டுப்பள்ளிக்கு வருகின்றார். இத்தலத்து இறைவன் மீது, செய்யருடிே (1.5) என்ற முதற்குறிப் புடைய செந்தமிழ்ப் பாமாலை தொடுத்துப் போற்று கின்றார். இதில், திரைகளெல் லாமலரும் சுமந்து செழுமணி முத்தொடு பொன்வரன்றிக் கரைகளெல் லாமணிசேர்ந் துரிஞ்சிக் காவிரி கால்பொரு காட்டுப்பள்ளி உரைகளெல் லாமுணர் வெய்தி நல்லவுத்தமரா யுயர்ந்தா ருலகில் அரவமெல் லாமரை பார்த்தசெல் வர்காட்செய அல்லல் அறுக்கலாமே (3) என்பது மூன்றாம் பாடல். இதன் பின்னர் தென் திருக்காட்டுப்பள்ளி இறைவனிடம் விடைபெற்றுக் கொண்டு தென் முல்லை வாயில்’ என்ற திருத்தலத்திற்கு வருகின்றார். வந்தவர், 8. காட்டுப்பள்ளி (கீழைத்திருக்காட்டுப்பள்ளி): ஆவணி சுவரர் கோயில் என்றும் பெயர் வழங்கும். சீகாழியிலிருந்து 9 கல் தொலைவிலுள்ளது. வழியில் திருவெண்காடு உள்ளது. சம்பந்தர் பாடல் மட்டிலும் பெற்ற தலம். 9. முல்லை வாயில் : (தென்) சீகாழியிலிருந்து 8 கல் தொலைவு. கடற்கரைத் தலம். சம்பந்தர் ஒருவரே பாடிய தலம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஞானசம்பந்தர்.pdf/70&oldid=856516" இலிருந்து மீள்விக்கப்பட்டது