பக்கம்:ஞானசம்பந்தர்.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ః ஞானசம்பந்தர் துன் கண்டியுண்டு (2. 88) என்று முதற் குறிப்புடைய செந்தமிழ் மாலையால் தலத்து இறைவனை வாழ்த்திச் சேவித்கின்றார். ஒன்றொன் றொடொன்று ஒருநான்கொ டைந்து மிருமூன்றொ டேழு முடனாய், அன்றின் றொடென்றும் அறிவான வர்க்கும் அறியாமை கின்ற அானுர், குன்றொன் றொடொன்று குலையொன் - றொடொன்று. கொடியொன் றொடொன்று குழுமிச் சென்றொன் றொடொன்று செறிவால் கிறைந்த திருமுல்லை வாயில் இதுவே (4} என்பது இம்மாலையின் நான்காவது மலர். இதன் பின்னர் கோழிக்குத் திரும்பி விடுகின்றார். சில நாட்கள் அங்குத் தங்குகின்றார். இதனைச் சேக்கிழார் பெருமானின், திருமுல்லை வாயில் எய்திச் செந்தமிழ் மாலை சாத்தி மருவிய பதிகள் மற்றும் வணங்குவார் மறையோர் ஏத்தத் தருவிே புகலி வந்து : ஞானசம் பந்தர் சரிந்தார் (ஞானசம்ந் 127) (புகலி.சீகாழி) என்ற பாடலால் அறிய முடிகின்றது. சீகாழியில் தங்கி விருக்கும் போது நாடோறும் தோணிபுரத்து ஈசனை திைபடும் வழக்கத்தை விருப்புடன் மேற்கொண்டுள்ளார். கோழியில் தங்கியிருக்கும் ஒரு நாள் மயேந்திரப் பள்ளி: வருகின்றார். 10. மயேந்திரப் பள்ளி (கோயிலடிப்பாளையம்). இத் தலம் கொள்ளிடம் என்ற இருப்பூர்தி நிலையத்திலிருந்து 7 கல் தொலைவிலுள்ளது. சம்பந்தர் பாடல் மட்டிலும் பெற்ற தலம். r

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஞானசம்பந்தர்.pdf/71&oldid=856517" இலிருந்து மீள்விக்கப்பட்டது