பக்கம்:ஞானசம்பந்தர்.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பிள்ளையாரின் கன்னித் திருத்தலப் பயணம் 27° "திரை தரு பவளமும் (3:31) என்ற முதற் குறிப்புடைய செந்தமிழ் மாலையை இத்தலத்து ஈசனுக்குச் சூட்டு கின்றார். இதில், கித்திலத் தொகைபல கிரைதரு மலரெனச் சித்திரப் புணரிசேர்த் திடத்திகழ்க் திருந்தவன் மைத்திகழ் கண்டனன் மயேந்திரப் பள்ளிவுட் கைத்தல மழுவனைக் கண்டடி பணிமினே (5) என்பது ஐந்தாவது நறுமலர். இது முதல் முறை வந்தபோது பாடியது. இங்கிருந்து மீண்டும் திருமுல்லை வாயில் வந்து (ஞானசம்பந்.129). அதனருகேயுள்ள கலிக்கா மூ ரு க் கு வருகின்றார். மடல்வரையின் (3105). என்ற திருப்பதிகச் செந்தமிழ் மாலையால் இத்தலத்து. இனறவனை ஏத்துகின்றார். இதில், வானிடை வாண்மதி மாடந்தீண்ட மருங்கே கடலோடிய கானிடை கீழலில் கண்டல் வாழும் கழிசூழ் கலிக்காமூர் ஆனிடை ஐந்துகந் தாடினானை அமரர் தொழுதேத்த நானடை வாம்வண மன்புதங்த நலமே நினைவோமே (5) என்பது ஐந்தாவது மணம் மிக்க வாடா நறுமலர். அடுத்து, குருகாவூர்” என்ற திருத்தலத்திற்கு வருகின்றார். சுண்ண வெண் நீரணி (3-124) என்ற முதற்குறிப்புடைய 11. கலிக்காமூர் (அன்னப்பன் பேட்டை}: சீகாழி யிலிருந்து 7 கல் தொலைவிலுள்ளது. இத்தலத்தை சம்பந்தர் மட்டிலுமே பாடியுள்ளார். 12. குருகாவூர் (திருக்கடாவூர்): சீகாழியிலிருந்து 3; கல் தொலைவிலுள்ளது. இறைவன் சுந்தரருக்குக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஞானசம்பந்தர்.pdf/72&oldid=856518" இலிருந்து மீள்விக்கப்பட்டது