பக்கம்:ஞானசம்பந்தர்.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருநீலகண்ட யாழ்ப்பாணருடன் தல வழிபாடு 37 ஏவார்சிலை எயினன் உரு வாகி யெழில்விசயற்: கோவாதவின் னருள்செய்தவெம் ஒருவர்க்கிட முலகில் சாவாதவர் பிறவாதவர் தவமேமிக உடையார் மூவாதடின் முனிவர்தொழு முதுகுன்றடை வோமே. (6) என்பது ஆறாவது நறுமலர். தேவராயும் அசுரராயும் (1.33) என்ற முதற் குறிப் புடையது இரண்டாவது மாலை. பாடு வாருக் கருளு மெக்தை பனிழுது பெணவமுக்கீர் கீடு பாரு முழுது மோடி அண்டர் கிலைகெடலும் சேரும் பள்ளமான இடத்திலுள்ளார். இங்கிருந்து தண்ணிர் செல்ல வழியிருப்பதால் பழமலையின் உயரத்தை ஊகிக்க லாம். கோயிலுக்கெதிரில் மணிமுத்தாறு ஓடுகின்றது. இத் தலத்தில் பதிகம் பாடி சுந்தரர் 12000 பொன் பெற்று இந்த ஆற்றிலிட்டு ஆரூர்க் குளத்தில் எடுத்த வரலாறு சிறப் புடையது. காசியில் இறந்தால் முத்தி கிடைப்பதுபோல் இத்தலத்தில் இறந்தால் சாருட பதமுத்தி கிடைக்கும் (கந்த புராணம்). துறைமங்கலம் சிவப்பிரகாச சுவாமிகன் முதலிய பல பெரியோர்கள் இத்தலத்தில் பெரிதும் ஈடு பட்டவர்கள். மாசி மகத்தைத் தீர்த்தமாகக் கொண்ட 10 நாள் விழாவில் 6ஆம் நாள் பகலில் இடபோத்ஸவம் பிரபலமானது, காசியிலும் வீசம் பெரியதால் இத்தலம் விருத்தகாசி" என்று கூறப் பெறுவதுண்டு.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஞானசம்பந்தர்.pdf/82&oldid=856542" இலிருந்து மீள்விக்கப்பட்டது