பக்கம்:ஞானசம்பந்தர்.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருநீலகண்ட யாழ்ப்பாணருடன் தல வழிபாடு 39 தேவாசிறியோம் (2:54) என்ற முதற்குறிப்புடைய பதிகம் ஐந்தாவது. இதில், அல்லிமலர்மேல் அயனும் அரவின் அணையானும் சொல்லிப் பரவித் தொடரவொண்ணா சோதியூர் கொல்லை வேடர் கூடிகின்று கும்பிட முல்லை.அயலே முறுவல் செய்யும் முதுகுன்றே. (9) என்பது ஒன்பதாவது பாடல். ஆறாவது சொல்மாலை வண்ண மாமலர்" (3.34) என்ற முதற் குறிப்பையுடையது. இதில், கடிய வாயின குரற்களிற் றினைப் பிளிறவோர் இடிய வெங்குரலி னோடாளிசென் றிடுநெறி, வடிய வாய்மழு வினன்மங்கையோ டமர்விடம் செடிய தார்புற வணிதிரு முதுகுன்றமே (5) என்பது ஐந்தாவது வாடா நறுமலர். முரசதிர்ங் தெழுதரு' (3.99) என்று தொடங்கும் பதிகம் ஏழாவது. இதில், முழவமர் பொழிலணி முதுகுன்ற மேவிய மழவிடை யதுவுடை யீரே மழவிடை யதுவுடை வீருமை வாழ்த்துவார். பழியொரு பகையிலர் தாமே. (3) என்பது மூன்றாவது மலர். இந்தப் பதிகத்தில் 5, 6, 7-ஆம் பாடல்கள் காணப்பெறவில்லை. பழமலை நாதரிடம் விடை பெற்றுக்கொண்டு பெண்ணாகடம் வருகின்றார். ஒடுங்கும்பிணி (1:59) 9. பெண்ணாகடம்: விழுப்புரம் - திருச்சி இருப்பூர்தி வழியிலுள்ள பெண்ணாகடம் என்ற நிலையத்திலிருந்து 1 கல் தொலைவு. தலப்பெயர் சுருக்கமாகக் கடந்தை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஞானசம்பந்தர்.pdf/84&oldid=856546" இலிருந்து மீள்விக்கப்பட்டது