பக்கம்:ஞானசம்பந்தர்.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ఖీ ஞானசம்பந்தர் ன்ைற முதற்குறிப்புடைய செந்தமிழ் மாலையைப் பாடி இறைவனை வழிபடுகின்றார். இந்த மாலையில், பன்னின்மை குன்றிச் செவிகேட்பிலா படர்நோக்கிற் கண்பவனக்கிற கன்னீர்மை குன்றித் திரைத்தோலொடு கஏைதோன்றும்காலம் மக்காதல்முன் பொன்னீர்மை துன்றப் புறந்தோன்று கற்புனல்பொதிந்த புன்சடையினானுறையும் தொன்னீர்க் கடங்தை தடங்கோயில்சேர் துங்கானைமாடம் தொழுமின்களே. (6) என்பது ஆறாவது வாடா நறுமலர். மூத்துச்சிவிகை முதலியன பெறுதல் : பெண்ணாகடம் இறைவனிடம் விடைபெற்றுக் கொண்டு நெல் வாயில் அரத் துறை' என்த திருத்தலத்தை நோக்கிப் புறப்படு கின்றார். இதற்கு முன் எல்லாம் வழிநடை இளைப்பு நீங்க ஒவ்வொரு சமயம் தம் தந்தையார் தோளின்மேல் என்றும், ஆலயப் பெயர் தூங்கானை மாடம் என்றும் வழங்கும். கலிக்கம்ப நாயனார் தலம். அப்பர் பெருமான் தம்மைச் சிவன் சொத்து என்று உலகறியச் சூலக்குறியும் இடபக்குறியும் தமது தூல உடலில் பொறிக்கும்படி வேண்டி அவ்வாறே பெற்ற அற்புதத் தலம். அச்சுத களப்பாளர் என்ற வேளாளார் திருவெண்காட்டு முக்குள நீராடி வழிபாடு செய்து மெய்கண்டார் என்ற புதல்வரைப் பெற்ற தலம். மெய்கண்டார் சிவஞான போதம் அருளிச் செய்து திருக்கயிலாய பரம்பரையைத் தாபித்த சந்தான முதற்குரவர். 10. கெல்வாயில் அரத்துறை : பெண்ணாகடம் இருப் பூர்தி நிலையத்திலிருந்து 4 கல் தொலைவு. நிவா என்னும் வெள்ளாற்றங்கரையிலுள்ளது. சம்பந்தருக்கு முத்துச் சிவிகை, குடை, சின்னங்கள் சிவபெருமானால் தரப்பெற்ற அதிபுதித் தலம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஞானசம்பந்தர்.pdf/85&oldid=856548" இலிருந்து மீள்விக்கப்பட்டது