பக்கம்:ஞானசம்பந்தர்.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருநீலகண்ட யாழ்ப்பாணருடன் தல வழிபாடு 4i. அமர்ந்து செல்லும் பழக்கமுடைய பிள்ளையார் திருவரத் துறையினை நோக்கிச் செல்லும்போது அப்பழக்கத்தை விடுத்து நடந்து செல்கின்றார். மலரினும் மெல்லிய திருவடிகள் தரையிற்பட்டு வருந்த விரைந்து நடக்கின்றார். இது கண்டு தந்தையாரும் பரிவுறுகின்றார். பிள்ளையார் திருவைந் தெழுத்தினை ஒதிக் கொண்டு மாறன்பாடி என்ற ஊரினை அடைவதற்கு முன்னர்க் கதிரவனும் மேற் றிசையில் மறைகின்றான். அன்றிரவு பிள்ளையாரும் அடியார்களும் மாறன்பாடியிலேயே தங்குகின்றனர். பிள்ளையாரது வழிநடை வருத்தத்தைத் திருவுளங் கொண்ட அரத்துறையீசன் நெல்வாயிலிலுள்ள மறை யோரின் கனவில் தோன்றி ஞானசம்பந்தன் நம்மை நோக்கி வருகின்றான். அவனுக்கென முத்துச் சிவிகை, குடை, சின்னம் ஆகியவற்றை நம்பாற் பெற்றுக்கொண்டு அவனை யடைந்து கொடுப்பீர்களாக’ என அருள்செய்து மறைந்தருளுகின்றார். அஃதுணர்ந்த மறையவர் அனை வரும் வியப்புற்று விழித்தெழுகின்றனர்; தாம் கனவில் கண்ட காட்சியை ஒருவருக்கொருவர் கூறி மகிழ்கின்றனர். அருணோதயத்தில் அரத்துறைக் கோயிலைத் திறந்து பார்க்கும்போது முத்துச் சிவிகை, முத்துக் குடை, முத்துச் சின்னம் என்பன இருத்தலைக் கண்டு மகிழ்கின்றனர். அவற்றையெடுத்துக் கொண்டு மங்கல ஒலி முழங்க காழிப் பிள்ளையாரை எதிர்கொண்டழைக்கச் செல்லுகின்றனர்.' அரத்துறை இறைவன் பிள்ளையார் கனவிலும் தோன்றி, நாம் அரத்துறை வாழும் வள்ளல். யாம் மகிழ்ந்தளிப்பனவற்றை நீ ஏற்றுக்கொள்ளலாம் என்று கூறி மறைகின்றார். சண்டை வேந்தரும் திருவைந்தெழுத் தோதி எழுந்து காலைக்கடன்களை முடித்துக்கொண்டு இறைவன் திருவருளை சிந்தித்தவண்ணம் அமர்ந்திருக் கின்றார். இந்நிலையில் அரத்துறை மறையவர்கள் காழிப் 11. பெ. பு : ஞானசம்பந்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஞானசம்பந்தர்.pdf/86&oldid=856550" இலிருந்து மீள்விக்கப்பட்டது