பக்கம்:ஞானசம்பந்தர்.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருநீலகண்ட யாழ்ப்பாணருடன் தல வழிபாடு 43 வெண்ணெய் (3.96) என்ற முதற் குறிப்புடைய திருப்பதிகம் பாடி ஏத்துகின்றார் இத்தலத்து இறைவனை. இதில், நீர்மல்கு தொல்புகழ் கல்வெணெய் மேவிய ஊர்மல்கி உறையவல்லீரே ஊர்மல்கி உறையவல் லீர்உமை புள்குதல் பார்மல்கு புகழவர் பண்பே. {4} என்பது நான்காவது பாடல். நெல் வெண்ணெய் ஈசனிடம் விடை பெற்றுக் கொண்டு பழுவூர்' என்ற திருத்தலத்தை அடைகின்றார் சீகாழி ஞானக் கன்று. இத்தலத்துப் பெருமான்மீது முத்தன் மூவிலை (2.34) என்ற முதற் குறிப்புடைய செந்தமிழ்ப் பாமாலை பாடிப் பரவுகின்றார். இதில், எண்ணுமொ ரெழுத்துமிசை யின் கிளவி தேர்வார் கண்ணுமுத லாயகட வுட்கிடம தென்பர் மண்ணின்மிசை யாடிமலை யாளர்தொழு தேத்திப் பண்ணினொலி கொண்டுபயில் கின்றபழு ஆரே. (4) என்பது கான்காவது பாடல். பழுவூர்ப் பரமரிடம் விடைபெற்றுக் கொண்டு விசய மங்கை' என்ற திருத்தலத்திற்கு வருகின்றார். வந்தவர் பேட்டை நிலையத்திலிருந்து 4 கல் தொலைவு. சம்பந்தரது பாடல் மட்டிலுமே பெற்றுள்ளது இத்தலம். 14. பழுவூர் : விருத்தாசலம் - திருச்சி இருப்பூர்தி வழியில் கல்லகம் என்ற நிலையத்திலிருந்து 4 கல் தொலைவு. *...", 15. விசயமங்கை : த ஞ் சாவூர் - மயிலாடுதுறை: இருப்பூர்தி வழியிலுள்ள சுந்தரப் பெருமாள் கோயில்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஞானசம்பந்தர்.pdf/88&oldid=856554" இலிருந்து மீள்விக்கப்பட்டது