பக்கம்:ஞானசம்பந்தர்.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

懿蘇 ஞானசம்பந்தர் டிஆவர். 2.1 என்ற முதற் குறிப்புடைய திருப்பதிகம் பாடிப் போற்றுகின்றார். இதில், தோடமர் காதினன் துதைந்த கீற்றினன்; டைமர் கோதையோ டினித மர்விடம்; காடமர் மாகரி கதறப் போர்த்ததோர்; வேடமதுடையண்ணல் விசய மங்கையே. (5) என்பது ஐந்தாவது பாடல். விசய மங்கையிலிருந்து வைகாவூர் என்ற திருத்தலத்துக்கு வருகின்றார் திருஞான சம்பத்தர். கோழைமிடறாக (3.71) என்ற முதற் குறிப் புடைய செந்தமிழ் மாலை பாடி வைகாவூர் இறைவனை அழுத்துகின்றார். . - இன்னவுரு இன்னகில மென்றறிவ தேரிைது கீதி பலவும் தன்னவுரு வாமென மிகுத்தவன் திே யொடுதா னமர்விடம் முன்னைவினை போய்வகையி னால் முழு துணர்ந்துமுயல் கின்ற முனிவர் மன்னஇரு போதுமரு வித்தொழுது சேரும்வயல் வைகா விலே. (4) என்பது கான்காவது மலர். வைகாவூர் இறைவனிடம் விடை பெற்றுக் கொண்டு புறம்பவம்' என்ற திருத்தலத்திற்கு வருகின்றார். மறம் (கும்பகோணத்திற்கு மேற்கில்) என்ற நிலையத்திலிருந்து * கல் தொலைவு. விசயன் (= அருச்சுனன்) வழிபட்டு வரம் பெற்றதை அப்பரின் 6.11.18 என்ற பாசுரம் கூறும். - 16. வைகாவூர் : சுந்தரப் பெருமாள் கோயில் இருப்பூர்தி நிலையத்திலிருந்து 5 கல் தொலைவு. கும்ப கோணத்திலிருந்து 5 கல் தொலைவே. - 17 புறம்பயம் (திருப்புறம்பியம்): கும்பகோணத்தி லிருந்து 5 கல் தொலைவு. இங்கு சங்க காலத்தில்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஞானசம்பந்தர்.pdf/89&oldid=856556" இலிருந்து மீள்விக்கப்பட்டது