பக்கம்:ஞானசம்பந்தர்.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருநீலகண்ட யாழ்ப்பாணருடன் தல வழிபாடு ఢీ பயமலைந்தவர் (2.30) என்ற முதற் குறிப்புடைய செந் தமிழ்ப் பதிகம் பாடிப் புறம்பயம் அமர்ந்த பெருமானை வழுத்துகின்றார். விரிந்தனை குவிந்தனை விழுங்குயி ருமிழ்ந்தனை திரிந்தனை குருந்தொசி பெருந்தகையு நீயும் பிரிந்தனை புணர்ந்தனை பிணம்புகு மயானம் புரிந்தனை மகிழ்ந்தனை புறம்பய மமர்ந்தோய். (3) என்பது இப்பதிகத்தின் மூன்றாவது பாடல், புறம்பயத் தீசனிடம் விடை பெற்றுக் கொண்டு சேய்ஞலூர் என்ற திருத்தலத்திற்கு வருகின்றார். :நூலடைந்த (1.48) என்ற செந்தமிழ்ச் சொல் மாலையால் இத்தலத்துப் பெருமானைப் போற்றுகின்றார். நூலடைந்த கொள்கை பாலே துன்னடி கூடுதற்கு மாலடைந்த கால்வர் கேட்க கல்கிய நல்லறத்தை ஆலடைந்த கீழல் மேவி பருமறை சொன்னதென்னே சேலடைந்த தண்கழனி சேய்ஞலூர் மேய வனே. என்பது இப்பதிகத்தின் முதற் பாடல். { t } பாண்டியனுக்கும் சோழனுக்கும் போர் நடந்தது. கோச் செங்கட்சோழன் வெற்றி பெற்றுத் தென்னவனாய் உலகாண்டான் (சுந்த, 7.39; 11). திருமருகல் வரலாற்றைப் போல் இங்கு ஒரு வணிகப் பெண்ணின் திருமணத்தை மெய்ப்பிக்க இறைவன் சாட்சி சொல்லியதால் தலத்து இறைவனுக்குச் சாட்சிநாதன் என்று பெயர் வழங்குகின்றது. 18. சேய்ஞலூர் : ஆடுதுறை (இருப்பூர்தி நிலையம்): நிலையத்திலிருந்து 7 கல் தொலைவு. முருகப் பிரான் பூசித்த தலங்களுள் ஒன்று. சண்டேசுவர நாயனார் அவதரித்துப் பூசித்து முத்தி பெற்ற தலம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஞானசம்பந்தர்.pdf/90&oldid=856560" இலிருந்து மீள்விக்கப்பட்டது