பக்கம்:ஞானசம்பந்தர்.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ఖీ ஞானசம்பந்தர் சேய்ஞலூர் ஆவனிடம் விடை பெற்றுக் கொண்டு பணத்தாளுக்கு வருகின்றார். :கண் பொலி நெற்றி (3.62) ஜான் முதற் குறிப்புடைய செந்தமிழ்ப் பாமாலையால் சேவிக்கின்தார். சூழ்தகு வல்வினையும் உடல்தோன்றிய பல்பிணியும் பாழ்பட வேண்டுதிரேல் மிகத்துமின் பாங்புனலும் யோழின வெண்மதியும் கணல்பொங்கா வும்புனைந்த தாழ்சடை யான்பனந்தாள் திருத்தாடகை பீச்சரமே. {4} என்பது கான்காவது நறுமணம் கமழும் வாடாமலர். தாடகையிச்சர ஈசனிடம் விடைபெற்றுக் கொண்டு பக்தனை கல்லூர் வருகின்றார். இடறினார் கூற்றை (3.121) என்ற செந்தமிழ்ச் சொல்மாலை கொண்டு பசுபதி பாசைப் பரவுகின்றார். - 19. பனந்தாள் (திருப்பனந்தாள்) : ஆடுதுறையிலிருந்து கல் தொலைவு. பேருந்து வசதி உண்டு. தாடகை என்னும் அசுரப் பெண் வழிபடும்போது அவள் உடை நெகிழி, அவள் கையிற் சேர்த்தனைத்து வழிபாட்டை விடாது செய்ய, மூலத்தான் மூர்த்தி சாய்ந்து வழிபாட்டை ஏற்றனன். இதை நிமிர்த்த மன்னன், யானைகளால் கயிறு சாத்தி இழுத்து முயன்றான். குங்குலியக் கலிய நாயனார் தம் கழுத்தில் கயிறு சாத்தி இழுக்க, அன்புக்குச் சாய்ந்த பரமன் அன்புக்காகவே நிமிர்ந்தனன். குமரகுருபர அடிகள் நிறுவிய காசி மடத்தின் தலைமைத் தானம் இது. 20. பந்தனை கல்லூர்: குத்தாலம் என்ற இருப்பூர்தி நிலையத்திலிருந்து 6 கல் தொலைவு. .

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஞானசம்பந்தர்.pdf/91&oldid=856561" இலிருந்து மீள்விக்கப்பட்டது