பக்கம்:ஞானசம்பந்தர்.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருநீலகண்ட யாழ்ப்பாணருடன் தல வழிபாடு 47 காட்டினா ரெனவும் காட்டினா ரெனவும் கடுந்தொழிற் காலனைக் காலால் வீட்டினா ரெனவும் சாந்த வெண்ணிறு பூசியோர் வெண்மதி சடைமேல் சூட்டினா ரெனவும் சுவடுதா மறியார் சொல்லுள சொல்லுகால் வேதப் பாட்டினார் போலும் பந்தணை கல்லூர் கின்றனம் பசுபதி யாரே. (3) என்பது மூன்றாவது சொல்மலர். இது முதல் வருகையின் போது பாடியது. பந்தனை நல்லூர் பசுபதியாரிடம் விடை பெற்றுக் கொண்டு ஓமாம் புலியூருக்கு வருகின்றார். பூங்கொடி மடவாள் (3. 122) என்ற முதற்குறிப்புடைய செந்தமிழ்ப் பாமாலையால் சேவிக்கின்றார். பாங்குடைத் தவத்துப் பகீரதற் கருளிப் படர்சடைக் காந்தநீர் கங்கை தாங்குதல் தவிர்த்துத் தராதலத் திழிந்த தத்துவன் உறைவிடம் வினவில் ஆங்கெரி மூன்றும் அமர்ந்துட னிருந்த அங்கையா லாகுதி வேட்கும் ஓங்கிய மறையோர் ஒமமாம் புலியூர் உடையவர் வடதளி யதுவே, {3} என்பது மூன்றாவது நறுமணம் மிக்க வாடாத சொல்மலர். 21. ஓமாம் புலியூர் குத்தாலம் என்ற இருப்பூர்தி நிலையத்திலிருந்து 11 கல் தொலைவு. (கொள்ளிடத்தைக் கடக்க வேண்டும்). சிதம்பரத்திலிருந்து 19 கல் தொலைவு. காட்டு மன்னார்குடி வழியாகப் பேருந்து மூலமாகவும் போகலாம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஞானசம்பந்தர்.pdf/92&oldid=856562" இலிருந்து மீள்விக்கப்பட்டது