பக்கம்:ஞானசம்பந்தர்.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருநீலகண்ட யாழ்ப்பாணருடன் தல வழிபாடு 49 புத்துார் பெருமானிடம் விடை பெற்றுக் கொண்டு கடம்பூர் என்ற திருத்தலத்திற்கு வருகின்றார். "வானகர் திங்களும்” (2:68) என்ற முதற்குறிப்புடைய செந்தமிழ் மாலையால் கடம்பூர் ஈசனைச் சேவிக்கின்றார். தீவிரியக் கழலார்ப்பச் சேயெரிகொண் டிடுகாட்டில் நாவிரிகூந் தணற் பேய்கள் ககைசெயகட் டம்கவின்றோன் காவிரிகொன் றைகலந்த கண்ணுதலான் கடம்பூரில் பாவிரியா டல்பயில்வார் பழியொடு பாவமிலாரே. (5) என்பது ஐந்தாவது நறுமணம் மிக்க சொல்மலர். கடம்பூர் பெருமானிடம் விடைபெற்றுக் கொண்டு நாரையூர் வருகின்றார். இந்த ஊர்ப் பெருமான் மீது சம்பந்தர் மூன்று பதிகங்கள் பாடியுள்ளார். உரையினிடல் வந்த (2.8.6) என்ற முதற் குறிப்புடைய பதிகத்தில், 23. கடம்பூர் : சிதம்பரத்திலிருந்து 15 கல் தொலைவு. காட்டு மன்னார் குடியிலிருந்து 3 கல் தொலைவு. சிதம்பரத் திலிருந்து காட்டு மன்னார் கோயிலுக்குப் பேருந்து வசதி உண்டு. ஆலயம் கரக்கோயில். இரதம், சக்கரம், குதிரை யமைந்துள்ள சிற்பமுறையில் மூலத்தானம். 24. காரையூர் (திருநாரையூர்) : சிதம்பரத்திலிருந்து 10 கல் தொலைவு. பேருந்து வசதி உண்டு. காட்டு மன்னார் கோவில் செல்லும் வழி. நம்பியாண்டார் நம்பி பிறந்த ஊர். நம்பி பொல்லாப் பிள்ளையாரிடம் கற்ற நிகழ்ச்சி, திருமுறை கண்ட வரலாறு இந்தப் பிள்ளையாரை பொறுத்தது. சுவையான வரலாறு. 佳

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஞானசம்பந்தர்.pdf/94&oldid=856564" இலிருந்து மீள்விக்கப்பட்டது