பக்கம்:ஞானியார் அடிகள்.pdf/105

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

93 வைத்தார். எங்கள் குழு அடக்கத் தோட்டத்தை அடைந்தது. எங்களின் ஆற்றொணா அழுகையொலி இரங்கல் உரைச் சொற்பொழிவை நிறுத்தச் செய்தது. நாங்கள் சென்றபோது க. வெள்ளை வாரணனார் பேசிக் கொண்டிருந்தார். அவரை அடுத்து யான் பேசினேன். பின்பு திருமேனி அடக்கக் கோயிலுக்குள் எடுத்துச் செல்லப்பட்டது. கோயிலின் கருவறையில் இரண்டாம் பட்டத்து அடிகளின் அடக்கம் உள்ளது. எதிரே நந்தி இருக்க வேண்டிய இடத்தில் மூன்றாம் பட்டம் அடக்கம். மூத்தபிள்ளையார் இருக்கவேண்டிய தென்மேற்கு மூலை யில் நான்காம் பட்டம் அடக்கம். எனவே, முருகன் இருக்க வேண்டிய வடமேற்கு மூலையில் ஐந்தாம் பட்டத்து ஞானியார் அடிகளார் அடக்கம் செய்யப் பட்டார். மாலை நான்கு மணியளவில் இறுதி நிகழ்ச்சிகள் யாவும் நிறைவெய்தின. பெறுதற்கரிய கடவுள் மாமணியை ஆழ்கடலில் இழந்தாற்போன்று அன்பர்கள் வருந்தி அகல மனம் இன்றியே அவ்விடத்தினின்றும் அகன்றனர். 11-2-1942-ஆம் நாள் முற்பகல் அடிகளாரின் அடக் கத்தின்மேல் உரிய மரபுப்படி சிவலிங்கம் அமைக்கப்பெற அடிகளார் முழுக் கடவுளாக ஆக்கப்பட்டார். அன்று மாலை ஆறாம் பட்டத்து அடிகளார் தலைமை யில் இரங்கல் கூட்டம் நிகழ்ந்தது. அறிஞர்கள் பலர் இரங்கல் உரையாற்றினர். சச்சிதானந்தம் பிள்ளை ஞான சூரியன் மறைந்துவிட்டார்-ஞான சூரியன் மறைந்து விட்டார்-என்று புலம்பினார். அடுத்துப் பேசிய யான், ஞாயிறு மறைந்துவிடின் நம் நாட்டில் பன்னிரண்டு மணி நேரம் சென்றதும் மீண்டும் வந்துவிடும். அடுத்தடுத்த பட்டத்து அடிகளார்கள் முயன்றால் ஐந்தாம் பட்டத்து