பக்கம்:ஞானியார் அடிகள்.pdf/125

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

113 அடிகளார் கருத்தைத் திரு.வி.க. ஏற்றுக்கொண்டார். 'நகரமக்கள் என்னிடம் கேட்டுக்கொண்டதால் மோட்டார் வண்டியில் விரைந்து சென்று நகரங்களை அடைந்து சொற் பொழிவாற்றலாம் என்ற கருத்தில் யான் அடிகளாரிடம் வேண்டுகோள் விடுத்தேன். ஆனால், அடிகளார் கூறுகிற படி, இதனால் சிற்றுார் (கிராம) மக்களைப் புறக்கணிக்க நேரிடும் என்பது உண்மைதான். கிராமங்கள் திருந்தினால் தான் உலகம் திருந்தும் என்னும் காந்தியடிகளின் கருத் துப்படி அடிகளாரின் கொள்கை ஒருவகையில் சரியானதே என்று கூறினார். அதன்பின் அடிகளார் சிவிகையிலேயே பலமுறை சென்று வந்தார்; தெற்கே இராமேசுரம் முதலிய ஊர்கட் கெல்லாம் போய்வந்தார். . இது நடந்தது இற்றைக்கு (1989) ஐம்பது - அறுபது ஆண்டுகட்கு முன்னதாகும். அடிகளார் இப்போது இருந் திருப்பின், ஒருவேளை மோட்டார் வண்டியில் செலவு மேற் கொள்ள ஒத்துக்கொண்டிருப்பாரோ - என்னவோ - தெரிய வில்லை. 16. வாழ்க்கை நடைமுறைகள் ஞானியார் அடிகளாரின் (அன்றாட) வாழ்க்கை நடைமுறையை இப்பகுதியில் காண்பாம்: அன்றாட வாழ்க்கை அடிகளார் விடியல் ஐந்து மணிக்கெல்லாம் எழுந்து காலைக்கடன், நீராடல், கடவுள் பூசனை முதலியவற்றை முடித்துக்கொண்டு ஏழு மணிக்கெல்லாம் பாடம் சொல்ல