பக்கம்:ஞானியார் அடிகள்.pdf/133

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

121 ஆற்றினார். அன்பர்களின் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. அடிகளாரின் கழுத்தில் ஒரு நீண்ட மாலையை அணிவித்த னர். உடனே, அடிகளார், நான் நெடுமாலை அடைந் தேன்’ என இருபொருள் (சிலேடை) தோன்றக் கூறினார். 'நெடு மாலை என்பது நீண்ட பூ மாலையையும் குறிக் கிறது - நெடியோனாகிய திருமாலையும் குறிக்கிற தன்றோ? புதுவைக் கிறித்துவக் குடும்பம் அடிகளார் புதுச்சேரிக் கலைமகள் கழகத்திற்கு ஒரு முறை சென்றிருந்தார். அப்போது, அவ்வூரில் பெருஞ் செல்வமும் பெருந் தன்மையும் உடையவரும் ரோமன் கத்தோலிக்கக் கிறித்துவ மதத்தைச் சார்ந்தவருமாகிய சின்னையா - ஞானப் பிரகாச முதலியார் அடிகளாரை அழைக்க அடிகளாரும் ஏற்றுக்கொண்டார். முதலியாரின் 'மங்களவாசம்’ என்னும் மாளிகையில் அடிகளார் தங்கினார். பின்னர், முதலியாரின் விருப்பத்தின்படி வைணவம் சார்ந்த சீதா கல்யாணம்’ என்னும் தலைப்பில் சொற்பொழிவாற்றினார். அப்போது பெற்ற பெருமைக்கு அளவே இலது. சாக்கியர் அந்தக் காலத்தில், சைவ சித்தாந்த மகா சமாசத்தின் தலைவராயிருந்தவரும் சித்தாந்த சரபம் -அஷ்டாவதானம் என்னும் சிறப்புப் பட்டம் பெற்றிருந்தவரும் ஆகிய பூவை கலியாண சுந்தரமுதலியார் என்பவர், ஞானியார் கிறித்தவர் வீட்டில் போய்த் தங்குவதும் வைணவச் சார்புச் சொற்பொழிவுகள் செய்வதும் பொருத்தமல்ல என்று கண்டித்துப் போர்க் கொடி உயர்த்தினார். அன்பர்கள் மூலம் இதைக் கேள்வியுற்ற அடிகளார் பின்வருமாறு கூறி @TFT st.