பக்கம்:ஞானியார் அடிகள்.pdf/142

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

130 அதைக் கேட்ட அடிகளார் அவனை இழிவுபடுத்த வில்லை; புன்முறுவல் பூத்தார். பண்ணியைக் கடவுளுக்குப் படைக்க நாங்கள் கண்ணப்பர் இல்லை என்று கூறி ತನಿ ನ T திரும்ப எடுத்துக்கொண்டு போகும்படி கூறினார். "மற்றும், அவனுக்கு உணவளித்து, சிறிதளவு காசும் கொடுத்தனுப்பினார். அவன்மேல் இரக்கம் காட்டினார். இதையறிந்த ரெட்டியார், சில பலாப் பழங்களைத் தாமே வண்டியில் ஏற்றிக்கொண்டு வந்து அடிகளார்க்குத் தந்து பெருமை பெற்றார். கும்பகோணத்தில் குழப்பம் கும்பகோணத்தில் உள்ள ஒர் ஆதீன மடத்தார், அந்த மடம் இருக்கும் தெருவில் ஞானியார் அடிகளார் பல்லக்கில் செல்லலாகாது என மறித்தனராம். அடிகளாரின் அன்பர்கள் செல்வோம் என்று அடம் பிடிக்க அம்மடத்தார் கூடாது என்று அடம் பிடிக்கப் பெருங்குழப்பம் ஏற்பட்டதாம். அடிகளார் தம்மவரை: நாக்கி, அவர்கள் மறுப்பதால் நாம் அத்த்ெரு வழியே செல்லவே கூடாது என்று தடுத்து வேறு வழிப்ாகச் சென்றாராம். பிறகு ஒரு முறை, இரவில் அடிகளார் பல்லக்கில் 'உறங்கிக் கொண்டிருந்தபோது, அன்பர்கள் வேண்டுமென்றே, அடிகளார் அறியாமல், அத் தெரு வழியே பல்லக்கைச் செலுத்திச் சென்றனராம். தமிழ்நாட்டு ஞானியாராகிய தமிழர் தமிழ்நாட்டுத் தெரு ஒன்றில் செல்லக் கூடாது என்று ஒரு சாரார் இடை மறித்தது மிகவும் இரங்கத் தக்க தன்றோ? துறவிகட்குள் வேறுபாடா? . - ஆனால், ஞானியார் அடிகளாரிடம் துறவிகட்குள் உயர்வு தாழ்வு காணும் இழிதகைமை இருக்கவில்லை. புதுச்சேரிக்கு வந்தபோதே, ஆங்குள்ள அம்பலத்தாடையர்