பக்கம்:ஞானியார் அடிகள்.pdf/143

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

131. மடத்துக்குச் சென்று, அம்மடத்துத் துறவியுடன் அளவளா விச் சென்றுள்ளார். மற்றும், சிவஞான பாலைய சுவாமிகளைத் தலைமை யாகக் கொண்ட மயிலம் மடத்திற்கும் அடிகளார் சென்றி ருக்கிறார். அங்கே பாலைய சுவாமிகள் அன்புடன் வர வேற்று உரிய சிறப்புகள் செய்தார். அடிகளார் சில நாட் கள் அங்கே சொற்பொழிவாற்றித் தமிழ்மணம் கமழச் செய்தார். அடிகளார் திருவண்ணாமலைக்குச் சென்றிருந்த போது, இரமணானந்த சுவாமிகளைப் (ரமண ரிஷியைப் பார்க்க விரும்பினார். இரமணர் அப்போது மலை உயரத் தில் உள்ள கந்தாசிரமத்தில் தங்கியிருந்தார். ஞானியார் அவ்வளவு உயரம் ஏறமுடியாமையால் இரமணரை இன் ானும் மலை இறக்கத்தில் உள்ள விருப்பாr' குகைக்கு அழைத்து வந்தார்கள். ஞானியார் கையுறையுடன் சென்று இரமணரைக் கண்டு அளவளாவினார். கோவை சார்ந்த பேரூர்ச் சாந்தலிங்க சுவாமிகளின் மடத்திற்குச் சென்று சிறப்புரை ஆற்றியுள்ளார். அடிகளா ரிடம் எவரிடமும் காழ்ப்பு கொள்வதோ, உயர்வுத் தாழ்வு கருதுவதோ இல்லை என்பது இதுகாறும் கூறியவற்றால் புலனாகும். மற்றொரு செய்தி ஈண்டு மிகவும் குறிப்பிடத்தக்கது. ஞானியார் அடிகளார் ஐந்தாம் பட்டத்துத் தலைவராய்ப் பட்டம் ஏற்றதும், ஞானியார் மடாலயத்தோடு தொடர் புடையவரா யிருந்த மற்றொருவர், ஐந்தாம் பட்டப்பதவி தமக்கே உரியது என நீதி மன்றத்தில் வழக்குத் தொடுத் தார். ஆனால், வழக்கில், இந்த ஐந்தாம் பட்டத்து அடிகளாரே வெற்றி பெற்றார். தமிழ்நாடு செய்த தவப் பயனாகும் இது. இந்த அடிகளார் தலைமை ஏற்றிரர்