பக்கம்:ஞானியார் அடிகள்.pdf/145

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

133 என்னும் குறட்பாவிற்குச் சிறந்த இலக்கியம் அடிகளார் எனலாம். - - வருபவர்க்குத் தாமே உடனிருந்து விருந்தோம்பும் பண்பு அடிகளாரிடம் அமைந்திருந்தது. அவர் பரிமாறவும் செய்வார். ஒவ்வொருவரையும் தனித்தனியே நலம் விசாரிப்பார். இலவசப் பாடம் யார்க்கும் எப்போதும் நடத்துவார். அழைப்பவர்கட்கு மறுப்புக் கூறாமல் சென்று சொற் பொழிவு ஆற்றுவார். ஐந்து மணி நேரம் பேசினும், இடை யில் நீர்கூடப் பருகார். சாதி சமயப் பகை அடிகளாரிடம் இல்லை. யாவர்க்கும் ஒத்த மதிப்பு அளிப்பார். சொற்பொழிவாளர்கட்குள் ஏற்படும் முரண்பாட்டைத் தமது தலைமை யுரையில் நேர்ந்து நிரவி அமைதி செய்வார். 'இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர் நாண நன்னயம் செய்துவிடல்” (314) என்னும் குறட்பாவிற்கு ஏற்பத் தமக்கு இன்னா செய்தார்க் கும் இனியவே செய்வார். பல்லாண்டுகட்கு முன்பு பார்த்தவர்களையும் நினைவு செய்து அடையாளங் கண்டுகொண்டு அருள்புரிவார். துறவியர்க்குள் நீ பெரியவனா-நான் பெரியவனா-என்ற பாகுபாடு இருக்கும் இவ்வுலகில், மற்ற துறவியரின் மடங் களுக்கும் சென்று அவர்களைக் காண்பார். உள்ளத்தில் ஒன்று-பேச்சில் வேறொன்று-செய்கையில் மற்றொன்று-என்னும் வேறுபாடு சிறிதும் இன்றி மூன்றும் (மனம்-வாக்கு-காயம்) ஒத்து இயங்குவதை அடிகளாரின் பேராண்மையில் காணலாம்.