பக்கம்:ஞானியார் அடிகள்.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



3

கொண்டுவந்து குவித்தவர் பலர். ஒருவரோ டொருவர் போட்டி போட்டிக் கொண்டு தாமே வலிந்து சென்று அடிகளார்க்கு விசிறு விசிறுவதைத் தம் பிறவிப் பயனாகக் கருதி இறுமாந்தவர் பலர். மணிக்கணக்கில் அடிகளாரின் திருமுன்பு அடக்க ஒடுக்கமாக அமர்ந்து உரையாடி உவகைக் கடலில் திளைத்துச் செம்மாந்தவர் பலர்.

2.முன்னோர் வழிமுறை

 இத்தகு பெருஞ் சிறப்புகட்கு உரிய தவப்பெருமகனார் எங்கே பிறந்தார்?-எங்கே வளர்ந்தார்?-எங்கே வாழ்ந்தார்?-என்பதை அறிவதற்குமுன், அவர்தம் முன்னோர் வழிவருமுறையைக் காண்பாம்.

முதல்பட்டத்து அடிகளார்

 திருக்கோவலூரில் சுப்பிரமணிய ஐயர் என்பவர் தம் மனைவி தப்ப்ம்மா என்பாருடன் வாழ்ந்து வந்தார். இங்கே ஐயர் என்பது பிராமணரைக் குறிப்பதன்று; பிராமணர் அல்லாத வீர சைவர்களும் ஐயர் என்ற பட்டத்திற்கு உரியவர்களாவர். எனவே, இந்தக் குடும்பம் வீர சைவக் குடும்பமாகும்.  
 

இவர்கட்கு, கலி-4774-ஆனந்த-ஆண்டு-கார்த்திகைத் திங்கள்-கார்த்திகை நாளில் (கி.பி. 1672-நவம்பர்) ஒர் ஆண் குழந்தை பிறந்தது. குழந்தைக்கு ஆறுமுகம் என்னும் பெயர் சூட்டப்பட்டது. ஆறுமுகம் தக்க அகவை (வயது) வந்ததும் மார்பில் சிவலிங்க்ம் அணிந்தார்; கல்வி கேள்வி களில் வல்லவரானார். துறவறம் பூண்டார். தமக்கெனத் திருக்கோவலூரில் ஓர் அருளகம் (மடாலயம்) அமைத்துக்