பக்கம்:ஞானியார் அடிகள்.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



14

ஞானியார் சங்கம் - காஞ்சிபுரம்

சன்மார்க்க சபை - கூடலூர்(தென்னார்க்காடு).

சோமாசுகந்த பக்தசனசபை - வண்டிப்பாளையம்,

சரசுவதி விலாச சபை - புலிசை

சைவசித்தாந்த சபை - உத்திரமேரூர்.

சமயாபி விருத்தி சங்கம் - செங்கல்பட்டு

சைவ சித்தாந்த சபை - காவித் தண்டலம்.

பார்க்கவ குலச்சங்கம் - மணம் பூண்டி - 1911

கோவல் சைவ சித்தாந்த சமாசம் - திருக்கோவலூர்-1912

சத்தி விலாச சபை-திருவண்ணாமலை-1915 - தமிழ்ச்சங்கம்

ஞானியார் பாடசாலை என்னும் பாடலேசுரர் தரும பாடசாலை -2-2-1917

வாகீச பக்தபத சேகர சபை - வட மட்டம் - 3-1-1919 இன்ன பிற - இன்ன பிற.

 இனி இக்கழகங்கள் தொடர்பான விவரங்களும் அடிகளார் கலந்து கொண்ட வேறுசில சங்கங்கள் பற்றிய விவரங்களும் வருமாறு:

மதுரைத் தமிழ்ச் சங்கம்:

 பாலவ நத்தம் குறுநில (சமீன்தார்) மன்னரான பாண்டித் துரைத் தேவர் 1900-ஆம் ஆண்டு சென்னை சென்று திரும்பும் வழியில் திருப்பாதிரிப்புலியூருக்கு வந்து அடிகளாரின் அருளகத்தில் தங்கினார். அடிகளாரின் பெருமையைக் - கேள்விப்பட்டு மகிழ்ந்து அடிகளாரோடு உரையாடி இன்புற்றார். அன்று மாலை தேவர் தலைமையில் அடிகளார் 'தமிழின் தற்கால நிலை' என்னும் தலைப்பில் சிறந்ததொரு சொற்பொழிவு செய்தார்; தமிழ் வளர்க்க மதுரையில் தேவரும் மற்ற செல்வர்களும்