பக்கம்:ஞானியார் அடிகள்.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



33

செளக்கார் என்பவரின் இல்லத்திலும், கீ. தெய்வசிகாமணி முதலியார் முதலியோரின் இல்லங்களிலும், ம. பாலசுப்பிர மணியனாரின் மயிலாப்பூர் இல்லத்திலும், அவரவரின் வேண்டுகோளுக்கு இணங்கிச் சென்று தங்கிச் சொல்லமிழ்தத் தமிழ்மாரி பொழிந்தார்.

 அடிகளார்க்கு முன்பு ஒரு முறை முதுகில் கட்டி வந்து குணப்படுத்தப்பட்டது. இப்போது துடையில் கட்டி வந்து துன்புறுத்தியது. அன்பர்கள் உடன் இருந்து வேண்டிய மருத்துவ உதவி புரிந்து உடல் நலம் பெறச் செய்தனர்.

கோவலும் கண்டாச்சிபுரமும்

 திருக்கோவலூரில் உள்ள கோவல் தமிழ்ச் சங்கத்தின் முதல் ஆண்டு விழா திரு.வி. கலியாண சுந்தரனார் தலை மையிலும் இரண்டாம் ஆண்டு விழா ச. சோமசுந்தர பாரதியார் தலைமையிலும் நடைபெற்றன. அடுத்தடுத்து வந்த மற்ற ஆண்டு விழாக்கள் பெரும்பாலும் ஞானியாரின் தலைமையிலேயே நடைபெற்று வந்தன. அவற்றுள், 1940 -ஆம் ஆண்டு நடைபெற்ற ஆறாம் ஆண்டு விழா மிகவும் குறிப்பிடத் தக்க முறையில் பெருஞ் சிறப்புடன் நடந்தேறியது.
 கோவலூருக்கு அண்மையில் கண்டாச்சி புரம் (கண்டராதித்தபுரம்) என்னும் ஊர் உள்ளது. அவ்வூரில் தொடங்கிய செந்தமிழ்க் கழகத்தின் முதல் ஆண்டு விழாவை அடிகளார் தலைமை ஏற்று நடத்தித் தரும்படி வேண்டினர். அவ்வாறே அடிகளார் அவ்வூருக்கு எழுந் தருளினார். ஊர் மக்கள் மேள தாளத்துடன் அடிகளாரை வரவேற்று ஊர்வலமாக அழைத்துச் சென்றனர். ஒவ் வொரு வீட்டு வாயிலிலும் சிவிகையை நிறுத்தி வழிபட்டுச் சிறப்பு செய்து அனுப்பினராம். விழா மிகவும் சிறப்பாக