பக்கம்:ஞானியார் அடிகள்.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



47

செயல்களையும் குணமாகத் திருப்பிப் பாராட்டுவதில் அடிகளைப்போல எவரும் இலர்-ஒரு முறை கோவையில், தமிழ்ச் சங்கத்தின் ஆண்டு நிறைவு விழாவில் தலைமை வகித்தார்கள். சங்கத்து அறிக்கைத் தாளில், கையிருப்பு ஐந்து அணா - நான்கு பை-என்றிருந்தது. நமது தலைமை உரையில், அக்குறைவை ஒரு குணமாகப் பாராட்டினார் கள். அதிக பணம் ஒரு சங்கத்திற்கு இருந்தால், அச்சங்கத் தினர் தாம் செய்யும் வேளையில் சுறுசுறுப்பு காட்ட மாட்டார்கள். எப்பொழுது குறைவாக உள்ளதோ அப் பொழுது தங்கள் ஊக்கத்தையே முதன்மையாகக் காட்டு வார்கள். இச்சங்கத்தார் பணம் சேகரிப்பதற்கு மாறா கச் செய்கையில் ஊக்கத்தைக் காட்டியுள்ளார்கள் என்பது, இச்சிறிய கை இருப்புத் தொகையால் தெளிவாகிறது என்று குறையைக் குணமாகப் போற்றினார்கள்.

 எந்தச் சமயத்திலும் எப்பேச்சிலும் ஒருவருக்கு மனத் தாங்கல் வராதபடி அழகாகப் பேசுவார்கள். தமிழேயன்றி வடமொழியிலும் தேர்ந்தவர்கள். ஒரு பொருளைப் பற்றிப் பேசுங்கால், இரு மொழிகளிலிருந்தும் எடுத்துக் காட்டுகளைக் கொண்டு விளக்குவார்கள். ஆங்கிலத்திலும் அடிக்கடிச் சொற்களை எடுத்து விளக்குவது உண்டு. எல்லாச்சமயங்களினுடைய கொள்கைகளையும் அறிவார் கள். ஒரு கொள்கையைத் தாக்கிப் பேசுங் காலத்திலும் இனிய சொற்களாகவே பேசுவதால் எவருக்கும் மனத்தாங்கல் ஏற்படாது. என்றாலும், தாம் எடுத்துக்கொண்ட கொள்கையை உறுதியுடன்தான் தாங்கிப் பேசுவார்கள். சைவக் கொள்கைகளை எவ்வளவு அழுத்தமாகப் பேசுவார்களோ, அதைப்போலவே, வைணவம் - கிறித்தவம் முதலியவைகளையும் சொல்லி விளக்குவார்கள்’’-
 இது கோவை கிழாரின் மதிப்புரை. ஆகவே, அடி