பக்கம்:ஞானியார் அடிகள்.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



55

இவ்வாறு அடிகளாரின் இருபொருள் - சொல் நயங் களைச் சொல்லிக் கொண்டே போகலாம். அதற்கு அளவு ஏது? ஏன் - இன்னும் இரண்டு பார்ப்போமே!:

சட்டியும் அகப்பையும்

 அடிகளார் வெளியூர்ச் செலவு மேற்கொண்டிருந்த காலத்தில் அன்பர்களின் வேண்டுகோட்கு இணங்கி ஒரு சிற்றுாரில் தங்கி அருளுரை நல்கினார்கள். அவ்வூரில் உள்ள செல்வர் ஒருவர்க்குக் குழந்தைப் பேறுவாய்க்கவில்லை. அடிகளாரிடம் இது தெரிவிக்கப்பட்டது. அறிந்த அடிகளார் 'சட்டியில் இருந்தால் தானே அகப்பையில் வரும்' என்னும் பழமொழியைக் கூறினார்கள். கேட்ட மக்கள் திடுக்கிட்டனர். அவருக்கு ஆண்மையிருந்தால் தானே குழந்தை பிறக்கும்; அவர் மனைவிக்கு மலடு இல்லாப் பெண்மை இருந்தால்தானே குழந்தை பிறக்கும் - என்ற பொருளில் இழித்துத் தாழ்த்திக் கூறியதாகப் பலரும் முதலில் எண்ணினர்;
 பின்னர் அடிகளார், அவர்களின் எண்ணத்தை யறிந்து பின்வரும் விளக்கம் தந்தார்: 'சட்டி என்பது சஷ்டி, அகம் என்பது வயிறு - அகப்பை என்பது வயிற்றில் உள்ள கருப்பை. எனவே, சஷ்டி விரதம் இருந்தால் வயிற்றுக் கருப்பையில் குழந்தை தங்கிப் பிறக்கும் - என்ற விளக்கத்தை அடிகளார் அறிவித்ததும், அனைவரும் வியந்து மகிழ்ந்து போற்றினர். பிள்ளையில்லாதவர்கள் சஷ்டி விரதம் இருந்த பின் பிள்ளைப்பேறு பெற்றதாகச் ச்ொல்லப் படுகிறது. என்னே அடிகளாரின் இருபொருள் - சொல் நயம் !

மடமும் மடமும்

 ஞானியார் அடிகளார் தமிழ்நாட்டு மடங்களைக் குறித்து ஒரு வகையான சொல்நய விளையாட்டு புரிவார்