பக்கம்:ஞானியார் அடிகள்.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



56

"தமிழ் நாட்டில் உள்ள மடங்கள் தமிழ் மடங்கள் அல்லஅவை சமசுகிருத மடங்களாகும்” எள்று அடிகளார் கூறுவதுண்டு. இதற்கு அடிகளார் விளக்கமும் தருவார். அதாவது:

 தமிழில் உள்ள 'மடம்' என்னும் சொல்லுக்கு இளமை பேதைமை, அழகு, மென்மை, இணக்கம் என்னும் பொருள்கள் உள. எனவே, மடம் என்னும் தமிழ்ச் சொல், துறவிகளின் இருப்பிடத்தைக் குறிப்பதில்லை. சமசுகிருதத்தில்

ட்

 தில் உள்ள 'மடம்' என்னும் சொல்லுக்குத் துறவிகள் வாழும் இடம், சத்திரம், சாவடி முதலிய பொருள்கள் உண்டு. எனவே, துறவிகள் வாழும் மடம் தமிழ்மடம் அன்று சமசுகிருத மடமாகும் என அடிகளார் கேட்பவர் வியக்கும் வண்ணம் சொல்விலையாட்டின்பம் நல்குவார். அடிகளாரின் சொல்வன்மையின் திறனே திறன்!

7. அடிகளாரின் தமிழ்ப் பணி

 துறவியர் சமயப் பணி செய்வதில் வியப்பில்லை. மடாலயங்களில் - ஆதினங்களில் உள்ள துறவியர்கட்குச் சமயப் பணி செய்வது கட்டாயக் கடமையாகும். ஆனால், அனைவரும் தாய்மொழி வளர்ச்சிப் பணி அஞ்சாமல் - கசக்காமல் - வெறுக்காமல் செய்கிறார்களா என்பதே கேள்வி.
 தமிழ் என்று சொன்னாலே அஞ்சியும் அருவருத்தும் ஒதுங்கிக் கொள்ளும் தமிழ்ப் பெரியார்கள் பலர் தமிழ் நாட்டில் உள்ளனர். அவர்கள், தமிழ் - தமிழ் என்று சொல்பவர்களைப் பகைவர் போல் கருதித் தம்மோடு சேர்ப்பதில்லை. 'தமிழ்’ என்று சொல்பவர்க்கு நன்மை செய்யாதது மட்டுமன்று - தீமையும் செய்கின்றனர். சிலர்,